Home /News /sports /

IND vs ENG | ரிஷப் பந்த் கொரோனாவுக்குப் பிறகு விருத்திமான் சகா, பாரத் அருண் தனிமைப் படுத்தப்பட்டனர்

IND vs ENG | ரிஷப் பந்த் கொரோனாவுக்குப் பிறகு விருத்திமான் சகா, பாரத் அருண் தனிமைப் படுத்தப்பட்டனர்

கோப்புப் படம்.

கோப்புப் படம்.

ரிஷப் பந்த் கொரோனா பாசிட்டிவ் ஆகி தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து இந்திய அணியின் உதவியாளர், த்ரோ ஸ்பெஷலிஸ்ட் தயானந்த் கரானிக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ரிஷப் பந்த் கொரோனா பாசிட்டிவ் ஆகி தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து இந்திய அணியின் உதவியாளர், த்ரோ ஸ்பெஷலிஸ்ட் தயானந்த் கரானிக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விருத்திமான் சகா, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இவர்களோடு ஸ்டாண்ட்-பை ஓபனர் அபிமன்யூ ஈஸ்வரனும் தனிமைபடுத்தப்பட்டதாக பிசிசிஐ உறுதி செய்துள்ளது.



    எனவே இவர்கள் பயோ-பபுளில் உள்ள மற்ற இந்திய அணி வீரர்களுடன் உடனடியாக இணைய வாய்ப்பில்லை.

    Also Read: Ind vs Eng| ரிஷப் பந்த்திற்கு கொரோனா பாசிட்டிவ்: இங்கிலாந்து-ஜெர்மனி யூரோ போட்டிக்குச் சென்றதால் வந்த வினை

    “பாரத் அருண், விருத்திமான் சகா, அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் கொரோனா உறுதி செய்யப்பட்ட த்ரோ டவுன் உதவியாளர் கரானியுடன் நெருக்கமாக இருந்துள்ளனனர். எனவே இந்த நால்வரும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். லண்டனில் இவர்கள் தங்க்ள் அறையில் இருக்க வேண்டியதுதான்” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து-ஜெர்மனி மோதிய யூரோ கோப்பை போட்டிக்கு சென்று அங்கு செல்ஃபியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார் ரிஷப் பந்த், இதனால் ஆன வினை கொரோனா தொற்று அவரை பீடித்தது. இப்போது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு சோதனைகளில் கொரோனா நெகட்டிவ் ஆனால்தான் அவர் அணியுடன் இணைய முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வீரர்களை எச்சரித்து கடிதம் எழுதியிருந்தார், அதில் விம்பிள்டன், யூரோ 2020 போன்ற தொடர்களுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து வீரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தன.

    பந்த் டெல்டா கொரோனா மாறுபாடு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார், இது இங்கிலாந்தில் பரவி வருகிறது. பந்த்திற்கு சிறிய அளவில் காய்ச்சல் அடித்ததை அடுத்து சோதனையில் கொரோனா பாசிட்டிவ் ஆனது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona positive, Rishabh pant, Team India, Wriddhiman Saha

    அடுத்த செய்தி