IND vs ENG Live Cricket Score | இங்கிலாந்து அணி வெற்றி

IND vs ENG T20 Live Updates: டி20 உலகக்கோப்பை அரையிறுதி: உடனுக்கு உடன் அப்டேட்ஸை அறிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.

  • News18 Tamil
  • | November 10, 2022, 16:33 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    16:23 (IST)

    இளையராஜாவுக்கு கவுரவ பட்டம் வழங்குகினார் பிரதமர் மோடி

    இசைஞானி இளையராஜாவிற்கு காந்திகிராம பல்கலைகழக கவுரவ பட்டம் வழங்குகினார் பிரதமர் மோடி

    16:16 (IST)

    பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் புத்தகங்களை கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

    பிரதமர் நரேந்திர மோடியை, பொன்னியின் செல்வன் தமிழ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பினை வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்


    15:58 (IST)

    ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

    காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.

    15:50 (IST)

    காந்திகிராம பல்கலை வளாகத்திற்குள் வந்தார் பிரதமர் மோடி.

    வழிநெடுக உற்சாகத்துடன் வந்த் பிரதமர் மோடி தற்போது காந்திகிராம பல்கலைகழக வளாகத்திற்கு வந்தார். 

    15:43 (IST)

    பிரதமருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு

     திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் நின்ற நிலையில் மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்து வருகிறார் பிரதமர் மோடி! 

    சாலைகளில் திரண்டுள்ள மக்கள் பூக்களை தூவி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.


    15:40 (IST)

    பிரதமருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு

    காரில் நின்ற நிலையில் மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்து வருகிறார். 

    15:27 (IST)

    திண்டுக்கல் வந்தடைந்தார் பிரதமர் மோடி


    திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி அமைக்கப்பட்டிருக்கிற ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு.

    15:8 (IST)

    மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி காந்திகிராம் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டு சென்றார்

    15:7 (IST)

    6 பேர் விடுதலை - முதலமைச்சர் வரவேற்பு 

    மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை முடிவுகளை நியமன பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உதாரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை 

    15:7 (IST)

    உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகுவாரா? திராவிட கழக தலைவர் ஆசிரியர் வீரமணி கேள்வி