இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் ஒரு வீரருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது, அது யார் என்று அப்போது தெரியாத நிலையில் தற்போது ரிஷப் பந்த் தான் அந்த வீரர் என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ரிஷப் பந்த்திற்கு நோய் அறிகுறிகள் இல்லாமலேயே ஒருவாரத்துக்கு முன்பே கொரோனா பாசிட்டிவ் என்று தெரிய வந்துள்ளது.
Also Read: இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்- தனிமைப்படுத்தப் பட்டார்
வெம்பிலியில் நடைபெற்ற இங்கிலாந்து-ஜெர்மனி இடையே நடைபெற்ற யூரோ 2020 கால்பந்தாட்டத்துக்குச் சென்ற வீரர்களில் ரிஷப் பந்த்தும் ஒருவர்.
ரிஷப் பந்த் தற்போது தெரிந்தவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் உடனடியாக துர்ஹாமில் இந்திய அணியுடன் இணைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
Also Read: தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும்.. வைரஸ் எதிர்ப்பாற்றலை முழுமையாக அளிக்காது: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெய் ஷா எச்சரிக்கை
இது தொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 8 நாட்களாக அவர் தனிமையில் இருக்கிறார் என்றும் ஹோட்டலில் வீரர்களுடன் இல்லை என்றும் வீரர் பெயரை தெரிவிக்க மாட்டோம் என்று ராஜிவ் சுக்லா கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இங்கிலாந்தில் பரவி வரும் டெல்டா வேரியண்ட் கொரோனா வைரஸ் ரிஷப் பந்த்திற்கு தொற்றியுள்ளதாகத் தெரிகிறது.
ஜெய் ஷா குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களை விம்பிள்டன், யூரோ 2020 கால்பந்து தொடர்களை தவிர்க்குமாறு கூறியிருந்தார். ஆனால் ரிஷப் பந்த் யூரோ கால்பந்து தொடருக்குச் சென்றதால் கொரோனா தொற்றியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.