IND vs ENG | 2-வது ஒருநாள்: இந்தியா பேட்டிங்; ரிஷப் பந்த் அணியில்; பீல்டிங் தேர்வு செய்து இங்கிலாந்து மீண்டும் ரிஸ்க்

IND vs ENG | 2-வது ஒருநாள்: இந்தியா பேட்டிங்; ரிஷப் பந்த் அணியில்; பீல்டிங் தேர்வு செய்து இங்கிலாந்து மீண்டும் ரிஸ்க்

ஆர்ச்சர் பந்தை ரிவர்ஸ் சிக்ஸ் விளாசிய பந்த்.

புனேயில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டும் டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட் செய்ய அனுப்பியுள்ளது. ரிஷப் பந்த் அணியில் இடம்பெற்றுள்ளார்.

  • Share this:
    புனேயில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டும் டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட் செய்ய அனுப்பியுள்ளது.

    இந்திய அணியில் ஷ்ரேயஸ் அய்யர் இடத்துக்கு ரிஷப் பந்த் வந்துள்ளார். முதல் போட்டியில் டாஸ் வென்று போட்டியை தோற்றார் இயன் மோர்கன், இங்கிலாந்து அணியில் மோர்கன் காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. பட்லர் கேப்டன் பொறுப்பு வகிக்கிறார். டேவிட் மலான் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    பட்லரும் டாஸ் வென்று மீண்டும் இந்திய அணியை பேட் செய்ய அனுப்பியுள்ளார்.

    டாஸ் தோற்றாலும் நல்லதுக்குத்தான் என்கிறார் கோலி, தான் டாஸ் வென்றிருந்தல் பேட்டிங்கையே தேர்வு செய்திருப்பேன் என்றார். இங்கிலாந்து எப்படி ஆடினாலும் சரி இதுதான் முடிவு என்று கூறும் கோலி, டாஸ் பற்றி கவலைப்படாமல் எதற்கும் தயாராக இருக்கிறது அணி என்று கூறினார்.

    பட்லரோ, கடந்த போட்டியில் பெரும்பாலும் வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தோம் கடைசியில் சொதப்பினோம், அதே சூழ்நிலைதான் இதே போட்டியிலும் அதனால் மீண்டும் பீல்டிங்கையே தேர்வு செய்தோம், அதிரடி வழிமுறை தான் எங்களுக்கு கைகொடுக்கிறது, விரட்டலில் சாதித்துள்ளோம் எனவே அதே பாணியைத்தான் கடைப்பிடிக்கப் போகிறோம் என்றார் திட்டவட்டமாக.

    இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டன் வந்துள்ளார். சாம் பிலிங்ஸ் இல்லை. மோர்கனுக்குப் பதில் டேவிட் மலான்.
    Published by:Muthukumar
    First published: