ரிஷப் பந்த் நீக்கம், ராகுல் அணியில்: இந்தியா நிதான தொடக்கம்

ரிஷப் பந்த் சிக்சர்.

புனேயில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா 17 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட்.

  • Share this:
    புனேயில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா 17 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட்.

    அதே போல் குருணால் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு முதல் போட்டி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது .

    டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தனர். இந்தியா 17 ஓவர்களில் 75 ரன்களுக்கு ரோகித் சர்மா (28 ரன்கள்) விக்கெட்டை இழந்தது. ரோகித் சர்மா 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். வைடு பந்து தேவையற்ற ஷாட். அடிக்க வேண்டிய பந்தையெல்லாம் லொட்டு வைத்து விட்டு வெளியே சென்ற பந்தை விரட்டி அடிக்க முயன்று விராட்டை கிரீசுக்குக் கொண்டு வந்து விட்டார்.

    ராகுல் பற்றி செய்தியாளர்கள் அடிக்கடி கேள்வி கேட்க கோலி கோபமடைந்து நான் அவரைத்தான் அணியில் எடுப்பேன், நீங்கள் யார் என்ற ரீதியில் கேள்வி எழுப்பும் வகையில் பார்மில் இருக்கும் ரிஷப் பந்த்தை கடைசி நேரத்தில் நீக்கி விட்டு ராகுலை அணியில் நுழைத்துள்ளார். கோலியின் ஈகோ அப்படி.

    இப்போது புனேயில் ஷிகர் தவான் 39 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலி 4 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

    இந்திய அணி வருமாறு:

    ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா

    இங்கிலாந்து அணி வருமாறு:

    டாம் கரன், மொயின் அலி, இயான் மோர்கன், ஆதில் ரஷீத், சாம் கரன், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மார்க் உட்.
    Published by:Muthukumar
    First published: