மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

கோலி, நடராஜன்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, இரண்டுக்கு ஒன்று என தொடரையும் வென்றது.

 • Share this:
  புனேயில் நடைபெற்ற இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா- தவன் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து அசத்தியது. 37 ரன்களில் ரோகித் சர்மாவும், 67 ரன்களில் தவனும், ரஷீத் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து வந்த கோலி மற்றும் லோகேஷ் ராகுல் தலா 7 ரன்களில் அவுட்டாகி, அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும், ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் ஜெட் வேகத்தில் ரன் விகிதம் உயர்ந்தது. அத்துடன், இருவரும் அரைசதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர். கடைசிக் கட்டத்தில் குர்ணால் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் சற்று அதிரடி காட்டியதால், 300 ரன்களை கடந்தது. முடிவில், 48.2 ஓவர்களில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

  இதையடுத்து, 330 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராயை 14 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவை ஒரு ரன்னிலும், புவனேஸ்வர் குமார் வெளியேற்றினார். கடந்த ஆட்டத்தில் அதிரடி சதம் விளாசி அச்சுறுத்தலாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ், இப்போட்டியிலும் தனது அதிரடியை தொடர்ந்தார். ஆனால், 35 ரன்கள் சேர்ந்திருந்த அவரை நடராஜன் அவுட்டாக்கினார். இதையடுத்து டேவிட் மலான் அரைசதம் விளாசி அணியின் ரன் உயர்வுக்கு வழிவகுத்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஆனால், சாம் கர்ரன் அதிரடியாக விளையாடி அச்சுறுத்தினார்.

  கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், நடராஜன் அந்த ஓவரை வீசினார். சாம் கர்ரன் தட்டிவிட்ட முதல் பந்தில், இரண்டாவது ரன்னுக்கு முயற்சித்த மார்க்-வுட் ரன் அவுட்டாகினார். அடுத்த வந்த டாப்லி ஒரு ரன் எடுத்து, கர்ரனுக்கு வாய்ப்பளித்தார். கடைசி 4 பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றிபெற்று, 2-க்கு 1 என ஒருநாள் தொடரையும் வென்றது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: