இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் ஆன 2வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்று தொடரில் 1-1 என்று சமநிலை வகித்து வரும் நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மொதீரா ஸ்டேடியத்தில் பிப்ரவரி 24ம் தேதி பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த அணியுடன் உமேஷ் யாதவ் உடற்தகுதி சோதனைக்குப் பிறகு இணைவார். ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி 7 விக்கெட்டுகளையும் 67 ரன்களையும் விளாசிய ஷர்துல் தாக்கூர் வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே கழற்றி விடப்பட்டார்.
முகமது சிராஜுக்கும் சென்னை டெஸ்ட் போட்டியில் சரியாக ஓவர்களைக் கொடுக்காமல் இருந்ததை பார்க்கும் போது விரைவில் சிராஜும் கழற்றி விடப்பட வாய்ப்புள்ளது.
கேட்டால், விஜய் ஹஜாரே டிராபிக்கு அவரை விடுவித்துள்ளார்களாம்.
சென்னை குழி பிட்ச் அத்தியாயம் முடிந்து தற்போது பகலிரவு பிங்க் பந்து போட்டி நடக்கிறது, இதில் பார்ப்போம் இந்திய வீரர்களின் திறமையை பார்க்க ஆவலாக உள்ளது. மிகப்பிரமாதமான ஸ்டேடியம் இதற்கு முன்பு இங்கு ஹவ்டிமோடி நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பும், மோடியும் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய அணி வருமாறு:
விராட் கோலி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே, ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா, ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
விராட் கோலி முதலீடு செய்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான மொபைல் பிரீமியர் லீக் பிசிசிஐயின் கிட் ஸ்பான்சராக ஆனது குறித்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டிருந்தது.
கோலியுடன் தொடர்புடைய இன்னொரு நிறுவனம் கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சி.இ.ஓ. அமித் அருண் சஜ்தே மேலும் இரண்டு நிறுவனங்களில் கோலியுடன் கூட்டுறவு வைத்திருப்பவர் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
இந்த நிறுவனம்தான் விராட் கோலி, ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோரது ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளையும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விராட் கோலி மீது ஆதாயம் தரும் இரட்டை நலன்கள் விவகாரம் மூண்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Shardul thakur