2-வது டெஸ்ட்டிலும் தோற்றால் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவார்?

2-வது டெஸ்ட்டிலும் தோற்றால் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவார்?

விராட் கோலி

விராட் கோலி உலகின் தலைசிறந்த மட்டையாளர். ஆனால் அவரது தலைமையின் கீழ் இந்தியா சரியாக ஆடவில்லை, அவர் தலைமையில் 4 டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக இந்தியா தோற்றுள்ளது.

 • Share this:
  விராட் கோலியின் கேப்டன்சி, அணித்தேர்வு முறைகள் பலகாலமாக விமர்சனத்துக்கு உட்பட்டு வருகின்றன, இப்போது ரஹானே ஆஸி.தொடரை வென்றதிலிருந்து தோல்வி முகம் காணும் விராட் கோலியின் கேப்டன்சியை லென்ஸ் கொண்டு பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது.

  சென்னை டெஸ்ட் போட்டியில் அனுபவம் வாய்ந்த குல்தீப் யாதவுக்கு பதிலாக ஷாபாஸ் நதீம் என்ற பேட்டிங்கும் வராத பவுலிங்கும் வராத பாடிலாங்குவேஜும் இல்லாத ஒருவரை இறக்கி கோலி தன் அணித்தேர்வு திறமையின்மையை நிரூபித்தார். ஷாபாஸ் நதீம் 2 இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததோடு, பவுலிங்கில் 233 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதுவும் விக்கெட்டுகளை இங்கிலாந்து வீரர்கள் வழங்கியதே தவிர இவர் பவுலிங் திறமையினால் அல்ல.

  இந்நிலையில் இங்கிலாந்தின் இடது கை வீச்சாளரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான மாண்ட்டி பனேசர், விராட் கோலி அடுத்த டெஸ்ட்டில் வெற்றி பெறவில்லை என்றால் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகுவார் என்று தெரிவித்துள்ளார்.

  சென்னையின் சாலைகளைப் போலவே சென்னை கிரிக்கெட் பிட்ச் போட்ட முதல் 2 நாட்களுக்கு அருமையாக இருந்தது, அதன் பிறகு குண்டும் குழியுமாக மாறியது இதில் இங்கிலாந்து பயனை அனுபவிக்க குண்டுகுழியில் சிக்கி இந்தியா சின்னாபின்னமானது. 227 ரன்களில் தோல்வி அடைந்தது.

  இந்நிலையில் மாண்ட்டி பனேசர் கூறியதாவது:

  விராட் கோலி உலகின் தலைசிறந்த மட்டையாளர். ஆனால் அவரது தலைமையின் கீழ் இந்தியா சரியாக ஆடவில்லை, அவர் தலைமையில் 4 டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக இந்தியா தோற்றுள்ளது.

  ரஹானே நல்ல கேப்டனாக தன்னை நிரூபித்ததிலிருந்து கோலிக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது. அவர் தலைமையில் வரிசையாக 4 போட்டிகள் தோல்வி அடைந்துள்ள நிலையில் சென்னையில் நடக்கும் 5வது போட்டியிலும் அவர் தோற்றால் அவர் கேப்டன்சியிலிருந்து விலகுவார் என்றே நான் நினைக்கிறேன்.

  ஷாபாஸ் நதீமை ஏன் சேர்த்தார்கள் என்பது எனக்கும் ஆச்சரியமே, அனுபவசாலியான குல்தீப் யாதவ் இருக்கும் போது, நதீம் என்ன வீசி விட முடியும்?

  ஜோ ரூட் அணி மாறாக இந்த வெற்றி மூலம் அதீத தன்னம்பிக்கையில் உள்ளனர். இது இந்திய அணிக்கு மேலும் சிக்கல்தான். என்றார்.

  இங்கிலாந்து தற்போது 70.2 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து தொடரை வென்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற நெருக்கடியும் கோலி படைக்கு உள்ளது.
  Published by:Muthukumar
  First published: