நேற்று ஓவலில் இங்கிலாந்தை இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் ரோஹித் சர்மா 76 நாட் அவுட், ஷிகர் தவான் 31 நாட் அவுட், இந்த இன்னிங்சில் ரோஹித் சர்மா சிலபல சாதனைகளை முறியடித்துள்ளார், அது என்னவென்று பார்ப்போம்:
ஒருநாள் போட்டிகளில் 250 சிக்சர்கள்: நேற்று 5 சிக்சர்களை விளாசிய ரோஹித் சர்மா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 250 சிக்சர்கள் மைல்கல்லை கடந்தார். 250 சிக்சர்களை தொட்ட முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா.
இங்கிலாந்தில் அதிக 50கள்; வெளிநாட்டு அணிகளில் இங்கிலாந்தில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார், இவர் 25 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தில் 7 அரைசதம் மற்றும் 7 சதங்களை அடித்துள்ளார். இதில் உலகக்கோப்பை 2019-ல் அடித்த 5 சதங்களும் அடங்கும்.
தொடக்க வீரராக அதிக 50கள்: ஓப்பனராக ரோஹித் சர்மா 60 முறை 50 அல்லது அதற்கு மேலான ஸ்கோரை எடுத்துள்ளார். ஹஷிம் ஆம்லா 56 முறை 50+ ஸ்கோர்களையும் ஷிகர் தவான் 52 முறை 50+ ஸ்கோர்களையும் எடுத்துள்ளனர்.
இதோடு கடந்த 5 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மா 126 சிக்சர்களை விளாசியுள்ளார். 5 ஆண்டுகளில் கிறிஸ் கெய்ல் 93 சிக்சர்களையும் ஜானி பேர்ஸ்டோ 79 சிக்சர்களையும் இதற்கு முன்னர் விளாசியுள்ளனர்.
ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் நேற்று 114/0 என்று சதக்கூட்டணி அமைத்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை சேர்ந்து எடுத்த 4வது ஜோடியாகத் திகழ்கின்றனர். இந்தியர்களில் சச்சின் -சவுரவ் கங்குலி ஜோடிதான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.