புனேயில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி ரோகித் சர்மா, ஷிகர் தவான் விக்கெட்டுகளை இழந்து 28 வது ஓவரில் 135 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
அபாரமாக ஆடி வரும் விராட் கோலி 63 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 56 ரன்கள் என்று பின்னால் வெளுத்து வாங்க நல்ல அடித்தளம் அமைத்துள்ளார், அவருடன் கே.எல்.ராகுல் 44 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
இருவரும் சேர்ந்து 18.3 ஓவர்களில் 95 ரன்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.
டாஸ் வென்ற பட்லர் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். ஷிகர் தவண் சொதப்ப ரோகித்சர்மா நன்றாகத் தொடங்கி 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இன்று 41 ரன்கள் எடுத்தால் கிரேம் ஸ்மித் சாதனையை உடைத்து விடுவார் என்று விராட் கோலி மீது எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கிணங்க கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சாதனையை விராட் கோலி உடைத்து விட்டார்.
கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 150 ஒருநாள் போட்டிகளில் 5, 416 ரன்கள் எடுத்து சாதனை புரிந்திருந்தார், விராட் கோலி 94 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அவரது ரன்களைக் கடந்து சென்று விட்டார்.
ஆனால் இதில் நம்பர் 1 கேப்டன் ரிக்கி பாண்டிங்தான், இவர் 234 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக இருந்து 8,497 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.
நம்பர் 2-வில் தோனி கேப்டனாக 200 ஒருநாள் போட்டிகளில் 6,641 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இன்னொரு தொடர்ச்சியான அரைசதம் எடுத்த விராட் கோலி சதமெடுத்த பிறகு ஆதில் ரஷீத் பந்தை ஸ்டேண்ட்சுக்கு அனுப்பி சிக்சர் விளாசி கொண்டாடினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.