India vs England-இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட்: போட்டி நேரத்தில் மாற்றம்
India vs England-இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட்: போட்டி நேரத்தில் மாற்றம்
இந்திய அணி
பர்மிங்காமில் இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நேரத்தை மாற்ற இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இப்போது இங்கிலாந்தில் பாரம்பரியமாக காலை 11:00 மணிக்கு தொடங்குவதை விட உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும்.

அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், ஆனால் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தின் படி மதியம் 3 மணிக்கே தொடங்கி விடும். இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களின் வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3மணிக்கு தொடங்கும் ஆட்டம் இரவு 10 மணி வரை நீடிக்கும்.
அரை மணி நேர முன் கூட்டிய தொடக்கம், ஆட்டத்தின் முடிவு நேரத்தைப் பார்க்க அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும். மேலும் ஒரு நாளைக்கு 90 ஓவர்களை முடிப்பதற்கான கூடுதல் 90 ஓவர்களை முடிப்பதற்கான முடிவாகவும் உள்ளது.
எப்போது ஆரம்பித்தால் என்ன, முன் கூட்டியே ஆரம்பித்தால் முன் கூட்டியே வெற்றி பெறப் போகிறோம் என்ற மிதப்பில் இங்கிலாந்து இப்போது ஆடி வருகிறது.
Also Read:
நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் ரன் விகிதம் 4.50வுக்கு மேல் உள்ளது, இது போன்று இந்திய பவுலர்களை அடிப்பது கடினம் என்றாலும் அணியில் ஷர்துல் தாக்கூர், ஜடேஜா அல்லது அஸ்வின் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே இப்போதைய கவலையாக உள்ளது.
யார் போட்டாலும் கொல்லுகிற மூடில் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் மெக்கல்லம் பயிற்சியில், பென்ஸ்டோக்ஸ் ஆக்ரோஷ கேப்டன்சியில் மாறியுள்ளது. இங்கு புஜாரா, விஹாரியெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? என்பதும் கவலைதான் என்கின்றனர், கிரிக்கெட் ஆர்வலர்கள்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.