இங்கிலாந்து 1-0 என்று தொடரை வென்றது- பாமி ஆர்மி கொழுப்புக்கு அமித் மிஸ்ரா பதிலடி
இங்கிலாந்து 1-0 என்று தொடரை வென்றது- பாமி ஆர்மி கொழுப்புக்கு அமித் மிஸ்ரா பதிலடி
பென் ஸ்டோக்ஸ்-பும்ரா
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் முழுமுற்றான பேட்டிங் பிட்சைப் போட்டு இங்கிலாந்து வெற்றிபெற்றது. இது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்று ட்ரா செய்தாலும் இங்கிலாந்து ரசிகர்கள் படை பாமி ஆர்மி இங்கிலாந்து தொடரை 1-0 என்று வென்றது என்று தங்கள் சமூக ஊடகப்பக்கத்தில் எழுதியது. இது குறித்து அமித் மிஸ்ரா சாடியுள்ளார்.

பிட்சில் போடுவது போலவே அல்லாமல் ஏதோ பெட்ஷீட்டில் போடுவது போன்று 5ம் நாள் பிட்ச் அமைந்தது, ஒன்றும் செய்ய முடியவில்லை, ஜோ ரூட்டெல்லாம் இறங்கி வந்து ஆடினார், பேர்ஸ்டோ முழு ஆதிக்கம் செலுத்தினார். கடைசியில் 4வது பெரிய சேசிங்கை இந்த ஆண்டு நிகழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் தான் செய்தது.
இந்திய பேட்டிங் 2வது இன்னிங்சில் சாதக நிலைமைகளை ஷார்ட் பிட்ச் பந்துவீச்சுக்கு மீண்டும் ஒருமுறை தாரை வார்த்தது. இதனால் 153/3லிருந்து 246 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இருப்பினும் 377 ரன்கள் என்பது வெற்றி பெறுவதற்குரியதுதான்.
Haash! British and their habit of distorting history for their own advantage. https://t.co/OIfSKWctXJ
ஆனால் இந்த எட்ஜ்பாஸ்டன் பிட்சில் குட்லெந்தில் வீசி ஸ்விங் செய்யலாம் என்றால் ஒரு ஸ்விங்கும் இல்லை ஒரு மண்ணும் இல்லை, பிட்சில் பந்துகள் அழகாக நின்று அடிப்பதற்கு வாகாக வந்தன. இதுதான் புதிய இங்கிலாந்தின் எழுச்சி, பேட்டிங் பிட்சாகப் போட்டு சாத்தி எடுப்பது. இது புரியாத இந்திய அணி 2வது இன்னிங்சில் சொதப்பியது.
இந்நிலையில் இங்கிலாந்து சாதாரணமாகவே வாய்க்கொழுப்பும் திமிரும் கொண்ட ஊடக உலகம் கொண்டது, பார்மி ஆர்மி என்ற ரசிகர் பட்டாளம் ஒரு தேசியவாதக் கூட்டம், அது தொடரை இங்கிலாந்து வென்றதாகப் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, பார்மி ஆர்மியின் இந்த ட்வீட்டுக்கு பதில் அளிக்கையில், பிரிட்டீஷார் வரலாற்றைத் திரிப்பது வழக்கம்தானே என்ற தொனியில் பதிவிட்டு பதிலடி கொடுத்தார்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.