Home /News /sports /

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்களில் இதுவரை இந்தியா- படுமோசமான தோல்வி தோனியின் கேப்டன்சியில்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்களில் இதுவரை இந்தியா- படுமோசமான தோல்வி தோனியின் கேப்டன்சியில்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இதுவரை இந்தியா

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இதுவரை இந்தியா

ஜூலை 1ம் தேதி, அதாவது நாளை இந்தியா 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த மைதானம் இந்திய அணிக்கு சில நல்ல நினைவுகளை கொடுப்பதாக இல்லை. இங்கு 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி கூட பெற்றதில்லை.

    ஜூலை 1ம் தேதி, அதாவது நாளை இந்தியா 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த மைதானம் இந்திய அணிக்கு சில நல்ல நினைவுகளை கொடுப்பதாக இல்லை. இங்கு 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி கூட பெற்றதில்லை.

    இதுவரை இந்தியா எட்ஜ்பாஸ்டனில் எப்படி ஆடியது?- இதோ தொடர் வாரியான விவரம்:

    1967 - இந்தியா-இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன்

    1967-ல் முதல் முறையாக பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டனில் இந்தியா ஆடியது. அந்தத் தொடரில் அது 3-வது டெஸ்ட். மன்சூர் அலிகான் பட்டௌடி என்கிற டைகர் பட்டவ்டிதான் கேப்டன். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 228 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இந்தியா 92 ரன்கள் ஆல் அவுட். சுனில் கவாஸ்கர் இல்லாத காலக்கட்டம், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட். பிஷன் பேஎடி 3 விக்கெட், பிரசன்னா 4 விக்கெட். தொடர்ந்து ஆடிய இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 410 ரன்கள் நல்ல போராட்டக் குணத்துடன் இந்தியா 277 ரன்கள் எடுத்தது, அஜித் வடேகர் 70 ரன்கள். கேப்டன் பட்டவ்டி 47.ஸ்பின் பவுலர்களான பிஷன் பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன், பிரசன்னா கடைசியில் இறங்கி 4 பேரும் 69 ரன்களை மொத்தமாக எடுத்து டஃப் ஃபைட் கொடுத்தனர். இங்கிலாந்து தொடரை3-0 என்று ஒயிட் வாஷ் கொடுத்தது.

    1974 இங்கிலாந்து -இந்தியா

    இது மிக மோசமான மேட்சாக அமைந்தது சுனில் கவாஸ்கர் வந்தார் ஆனால் முதல் இன்னிங்சில் 0, 2வது இன்னிங்சில் 4 அவுட், இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது, அதுவும் இந்தியா 165 ரன்களை எடுக்க இங்கிலாந்து அணியில் டெனிஸ் அமிஸ் 79, டேவிட் லாய்ட் 214, மைக் டென்னஸ் 100. 459/2. தொடர்ந்து ஆடிய இந்தியா 216 ஆல் அவுட்.

    1979, இங்கிலாந்து-இந்தியா:

    மீண்டும் 1979-ல் முதல் டெஸ்ட்டே இன்னிங்ஸ் தோல்வி கண்டது இந்தியா இப்போது கேப்டன் எஸ். வெங்கட்ராகவன். கபில்தேவ் வந்து விட்டார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 633/5. பாய்காட் 155, டேவிட் கோவர் 200. இந்த அடியிலும் கபில்தேவ் 46 ஓவர்கள் வீசி 15 மெய்டன்களுடன் 146 ரன்கள் கொடுத்து விழுந்த 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.இந்திய அணியில் கவாஸ்கர், சவுகான், வெங்சர்க்கார், விஸ்வநாத் மொஹீந்தர் அமர்நாத், கபில்தேவ் என்று நல்ல அணியாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் கவாஸ்கர் 61 ரன்கள் எடுக்க, விஸ்வநாத் 78,அமர்நாத் 31, வெங்சர்க்கார் 22, இந்தியா 297 ரன்கள் எடுத்து ஆல் அவுட். இந்தியாவுக்கு பாலோ ஆன் கொடுக்கப்பட்டது. மீண்டும் கவாஸ்கர் 68, சவுகான் 56,, விஸ்வநாத் 51, கபில்தேவ் 17 பந்தில் 21 என்று அடிக்க 253 ரன்களுக்குச் சுருண்டது இயன் போத்தம் 5 விக்கெட்டுகள், இந்தத் தொடரில்தான் ஓவல் டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் 2வது இன்னிங்சில் 221 ரன்கள் விளாச 438 ரன்கள் இலக்கை மகா விரட்டல் செய்து இந்தியா 430/8 என்று முடித்து ட்ரா செய்தது.

    1986-ல் முதல் ட்ரா!

    கபில்தேவ் கேப்டன்சியில் புதிய இந்திய அணி இதே எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துடன் ட்ரா செய்தது. இந்தியா ஏற்கெனவே அபாரமாக 2-0 என்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் ஆடியது. மைக் கேட்டிங் 183 ரன்கள் எடுக்க இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 390, இந்திய அணியும் 390. அமர்நாத் 79, அசாருதீன் 64. நம் கிரிஷ் ஸ்ரீகாந்த் 23.
    2வது இன்னிங்ஸில் சேத்தன் சர்மா பிரமாதமாக வீசி 6 விக்கெட்டுகளைச் சாய்க்க இங்கிலாந்து 235 ஆல் அவுட். இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 236 ரன்கள் ஆனால் 174/5 என்று டெஸ்ட் ட்ரா ஆனது.

    1996: மைக் ஆர்த்தர்டன் தலைனை இங்கிலாந்து 8 விக்கெட்டுகளில் வென்றது. இந்திய அணிக்குக் கேப்டன் அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்சுரேக்கர், பவுலிங்கில் ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே வந்து விட்டனர், கபில்தேவ் ஓய்வு பெற்று விட்டார். இந்தியா 214 ரன்களுக்கு ஆல் அவுட். ஸ்ரீநாத் அதிகபட்சமாக 52 எடுத்தார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் நாசர் ஹுசைன் சதமெடுக்க 313 ஆல் அவுட் ஆயினர். இந்தியாவின் 2வது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 122 ரன்களை விளாசினார். மற்றெல்லோரும் சொதப்ப இந்தியா 219க்கு சுருண்டது. இங்கிலாந்து 121 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து முடித்தது.

    2011-ல் தோனி தலைமையில் மிகப்பெரிய தோல்வி:

    2011-ல் தோனி கேப்டனாகியிருந்தார். இந்தியா 224 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. கம்பீர், சேவாக், சச்சின், திராவிட், லஷ்மண், ரெய்னா, தோனி என்று ஒரே ஸ்டார் மயம்தான், ஆனால் தோல்வி.இந்த 224 ரன்களில் தோனி 96 பந்துகளில் 77 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அலிஸ்டர் குக் 294 இந்திய அணியை புரட்டி புரட்டி எடுத்து 710 ரன்கள் அடித்து நொறுக்கினர். 2வது இன்னிங்ஸில் 244 ஆல் அவுட், மீண்டும் தோனி தான் 79 பந்தில் 74 ரன்கள் எடுத்தார் அதிகபட்சமாக. இந்தியாவுக்கு இன்னிங்ஸ் தோல்வி.

    2018 விராட் கோலி கேப்டன்சியில்...

    2018-ல் விராட் கோலி ஒருமுறை கூட ஆண்டர்சனிடம் விக்கெட் கொடுக்காமல் ஆடினார். இந்த எட்ஜ் பாஸ்டன் டெஸ்ட்டில் கோலி முதல் இன்னிங்ஸில் டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு 149 ரன்களை எடுத்தார், இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் ஒரு 51 ரன்கள் எடுத்தார், ஆனாலும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

    இதுதான் இந்திய அணியின் எட்ஜ்பாஸ்டன் கதை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, MS Dhoni, Virat Kohli

    அடுத்த செய்தி