India vs England | 2-வது டெஸ்ட் போட்டியில் இந்த 3 இந்திய வீரர்கள் நீக்கப்படலாம்

விராட் கோலி!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தியா வெற்றி பெற வேண்டிய நிலையில் மழை வந்து இங்கிலாந்தை தோல்வியிலிருந்து காத்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லார்ட்ஸில் தொடங்குகிறது.

 • Share this:
  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தியா வெற்றி பெற வேண்டிய நிலையில் மழை வந்து இங்கிலாந்தை தோல்வியிலிருந்து காத்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லார்ட்ஸில் தொடங்குகிறது.

  இந்திய அணியில் பவுலிங்கும் பின் கள வரிசை பேட்டிங்கும் பிரமாதமாக உள்ளது, அதே போல் ஓபனிங்கும் ஸ்திரமாக உள்ளது, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இந்தப் பிட்ச்களில் ஆடும் டெக்னிக்கை கண்டுப்பிடித்துக் கொண்டனர்.

  Also Read: 2019-ல் சொத்தை வங்கதேசத்துக்கு எதிரான செஞ்சுரிக்குப் பிறகு கோலி வேஸ்ட்: ஸ்கோர்லெஸ் கேப்டன்

  கோலி, புஜாரா, ரகானே கவலையளிக்கும் மூவர் ஆவார்கள். இதில் கோலி கேப்டன் அவரை ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் புஜாரா, ரகானே இடம் சற்றே கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது.

  லார்ட்ஸில் ட்ரெண்ட் பிரிட்ஜ் போல் இருக்காது, கிரீன் டாப் பிட்ச் போட்டாலும் அடியில் வலுவான தளம் இல்லாததால் பந்துகஸ் ஸ்விங் ஆனாலும் எழுச்சி இருக்காது, கொஞ்சம் வறண்ட வானிலை என்பதால் ஸ்பின் பந்து வீச்சும் எடுபட வாய்ப்புள்ளது.

  இந்நிலையில் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள அந்த 3 வீரர்கள் பற்றி பார்ப்போம்:

  1. முகமது சிராஜ்:

  இஷாந்த் சர்மாவுக்கு லேசான காயம் என்பதால் நாட்டிங்காமில் சிராஜ் ஆடினார். முதல் டெஸ்ட் போட்டியில் அவ்வப்போது நன்றாக வீசினார், சில வேளைகளில் அவர் பந்துகளில் ரன்களும் விளாசப்பட்டன. லைன் மற்றும் லெந்த் சில வேளைகளில் கட்டுப்பாடில்லாமல் இருந்தது.  இந்நிலையில் இஷாந்த் சர்மாவின் ஸ்விங் மற்றும் லைன் லெந்த் சிக்கனப் பந்து வீச்சினால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்தாலும் ஆகலாம் ஏனெனில் இஷாந்த் சர்மா ஆக்‌ஷன் சரியில்லை, முட்டிக்கால் மடங்குகிறது, அதிகம் குனிகிறார் வீசும் கை உடலை விட்டு விலகி வந்து கொண்டிருக்கிறது.

  ஆனால் இவற்றைப்பற்றியெல்ல்லாம் கோலி கவலைப்பட மாட்டார், அவருக்கு யாரையாவது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் அந்த விதத்தில் சிராஜ் மீது கோடாரி விழுந்தாலும் ஆச்சரியமில்லை. 100 டெஸ்ட்களை ஆடிய அனுபவமும் இஷாந்த் சர்மாவுக்குச் சாதகமாக உள்ளது.

  2. ஷர்துல் தாக்கூர்:

  முதல் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூரை வேகபவுலிங் ஆல்ரவுண்டராக கோலி களமிறக்கினார், பவுலிங்கில் ஸ்விங் செய்கிறார் வேகமில்லை, ஆனால் முதல் இன்னின்சில் கேப்டன் ஜோ ரூட்டை எல்.பி. செய்து 64-ல் வீழ்த்தியதால் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை பெறமுடிந்தது.  பேட்டிங்கில் டக் அவுட் ஆனார். ஆனால் இவர் ஒரு நல்ல பேட்ஸ்மென் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவருக்குப் பதிலாக அஸ்வினின் அனுபவத்தை கோலி பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை உட்கார வைத்தது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.

  எனவே லார்ட்சில் வெயில் அடித்து பிட்ச் வறட்சியாக இருந்தால் அஸ்வின் ஸ்பின் ரகம் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தல்தான் எனவே இங்கு ஷர்துல் தாக்கூர் பயனளிக்க மாட்டார் என்று கோலி முடிவுக்கு வந்தால் தாக்கூர் உட்கார வைக்கப்படலாம்.

  3. அஜிங்கிய ரகானே:

  ரகானே.


  சமீப காலமாக ரகானேயின் பேட்டிங் திறமையை இவர் சரியாக ஸ்கோராக மாற்றுவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, ரன் அவுட் செய்து விடுகிறார். அதாவது ஒன்று இவர் ரன் அவுட் ஆவார் இல்லையெனில் அடிலெய்டில் கோலியை இழுத்து விட்டது போல் எதிராளியை இழுத்து விட்டு ரன் அவுட் செய்து விடுவார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, ஹனுமா விகாரி ஆகியோர் புஜாரா, ரகானே இருவரையும் வெளியேற்ற தயாராக இருக்கின்றனர், இருந்தாலும் லார்ட்ஸ் டெஸ்ட் தொடங்கும்போதுதான் பிளேயிங் லெவன் தெரியும்.
  Published by:Muthukumar
  First published: