ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ஆட்டம் வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது’ : துணை கேப்டன் லிட்டன் தாஸ்

‘ஆட்டம் வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது’ : துணை கேப்டன் லிட்டன் தாஸ்

லிட்டன் தாஸ்

லிட்டன் தாஸ்

நாளை காலை சரியான திட்டத்துடன் நாங்கள் களத்தில் இறங்கினால் இந்திய அணியால் எதுவும் செய்ய முடியாது. – லிட்டன் தாஸ்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஆட்டம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அந்த அணியின் துணை கேப்டன் லிட்டன் தாஸ் கூறியுள்ளார்.

இந்தியா – வங்கதேசம் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 227 ரன்களும், இந்தியா 314 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட்டானது.

இதையடுத்து இந்திய அணி டெஸ்டில் வெற்றி பெற 145 ரன்களை 2ஆவது இன்னிங்ஸில் எடுக்க வேண்டும். இந்த எளிதான டார்கெட்டை நோக்கி களத்தில் இறங்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் 7, கே.எல்.ராகுல் 2, புஜாரா 6, விராட் கோலி 1 ரன்களில் வெளியேறினர்.

‘ஐபிஎல் மினி ஏலத்தை நினைத்து பதற்றம் அடைந்தேன்; இரவு தூங்கவில்லை’ – அனுபவம் பகிரும் சாம் கரன்

3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. அக்சர் படேல் 26 ரன்களுடனும், உனாட்கட் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் வெற்றி பெற 100 ரன்கள் இந்தியாவுக்கு தேவை. இந்நிலையில் ஆட்டம் தங்கள் கட்டுப்பாட்டில் தற்போது இருப்பதாக வங்கதேச அணியின் துணை கேப்டன் லிட்டன் தாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். நாளை காலையில் 2-3 விக்கெட்டுகளை நாங்கள் வீழ்த்தி விட்டால் போதும். நாங்கள் வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

‘சி.எஸ்.கே. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படலாம்…’ – நியூஸி. முன்னாள் வீரர் கணிப்பு

தற்போது இந்திய அணி கடும் நெருக்கடியில் உள்ளது. நாளை காலை சரியான திட்டத்துடன் நாங்கள் களத்தில் இறங்கினால் இந்திய அணியால் எதுவும் செய்ய முடியாது. இந்த மைதானத்தில் 4ஆம் நாள் ஆட்டம் மிக கடினமாக இருக்கும்.

200 – 220 ரன்களை நாங்கள் டார்கெட்டாக வைத்திருந்தால் இந்தியாவுக்கு இன்னும் கடுமையாக நெருக்கடி கொடுத்திருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket