ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியை நேரலையாக எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியை நேரலையாக எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…

கோப்பையுடன் இரு அணி கேப்டன்கள்

கோப்பையுடன் இரு அணி கேப்டன்கள்

முதல் டெஸ்ட் போட்டி வங்க தேசத்தின் சிட்டோக்ரம் நகரில் உள்ள ஜகுர் அகமது சவுத்ரி மைதானத்தில் காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா -  வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இதை நேரலையாக எந்த சேனலில் பார்க்கலாம் என்ற விபரங்களை தெரிவிக்கிறது இந்த பதிவு.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் அடுத்ததாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன ரோஹித் சர்மா காயம் அடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியை வழி நடத்தவுள்ளார். துணை கேப்டனாக புஜாரா செயல்படுவார்.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்… களத்தில் இறங்கும் இந்திய வீரர்கள் யார்?

முதல் டெஸ்ட் போட்டி வங்க தேசத்தின் சிட்டோக்ரம் நகரில் உள்ள ஜகுர் அகமது சவுத்ரி மைதானத்தில் காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் இந்தப் போட்டியை சோனி நெட்வொர்க் நிறுவனம் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது. சோனி லைவ் ஆப்பில் இந்த போட்டியை நேரலையாக பார்க்கலாம்.

வங்கதேசத்தில் காஜி டிவி, இலங்கையில் டயலாக் மற்றும் பியோ டிவி, தென்னாப்பிரிக்காவில் சூப்பர் ஸ்போர்ட் நெட்வொர்க், ஆஸ்திரேலியாவில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ், பிரிட்டனில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் நேரலை செய்கின்றன.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஃபைனலுக்கு முன்னேறும் அணி எது? வல்லுனர்களின் ப்ரெடிக்சன்…

நாளை தொடங்கும் போட்டி வரும் 18ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் -

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில், செதேஷ்வர் புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்

வங்கதேச அணி வீரர்கள்-

ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக், யாசிர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், ஜாகிர் ஹசன், அனமுல் ஹக், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, கலீத் அகமது, ஹொசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், ரெஜவுர் ரஹ்மான் ராஜா

First published:

Tags: India vs Bangladesh, Indian cricket team