ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் இணை... 159 ரன்கள் பார்ட்னர்ஷிப்

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் இணை... 159 ரன்கள் பார்ட்னர்ஷிப்

ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் அய்யர்

ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் அய்யர்

2 நாட்கள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் வங்கதேசம் இந்தியாவை விட 80 ரன்கள் பின்தங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

அதிகபட்சமாக அந்த அணியின் மோமினுல் 84 ரன்கள் சேர்த்தார். மற்றவர்களில் முஷ்பிகுர் ரகிம் 26, லிட்டன் தாஸ் 25 ஷாண்டோ 24 ரன்கள் எடுத்தனர்.

73.5  ஓவர்கள் தாக்குப்பிடித்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, 94 ரன்கள் எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சதத்தை தவறவிட்ட பந்த், ஸ்ரேயாஸ்.... டாக்கா டெஸ்டில் இந்திய அணி முன்னிலை

கேப்டன் கே.எல். ராகுல் 10 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் வெளியேறினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, கோலி ஆகியோர் தலா 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்பின்னர் சேர்ந்த ரிஷப் பண்ட் – ஷ்ரேயாஸ் அய்யர் இணை ஒருநாள் போட்டி போன்று வங்கதேச பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

சீரான இடைவெளியிலும் சிக்சரும் ஃபோரும் பறந்ததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 105 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 93 ரன்கள் எடுத்திருந்தபோது, மெகிதி ஹசன் பந்து வீச்சில் நூருல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

5ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் – ஷ்ரேயாஸ் இணை 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து 87 ரன்கள் எடுத்திருந்த ஷ்ரேயாஸ் ஷகிப் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த உடன் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்ட ட்வீட்

86.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 314 ரன்களை சேர்த்தது. இது வங்கதேசத்தை விட 87 ரன்கள் முன்னிலையாகும். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 2ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்களை எடுத்துள்ளது. நஜ்முல் உசைன் 5 ரன்களும், ஜாகிர் ஹசன் 2 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

2 நாட்கள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் வங்கதேசம் இந்தியாவை விட 80 ரன்கள் பின்தங்கியுள்ளது.

First published:

Tags: Cricket