இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. டாக்காவில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி வங்கதேச அணியை 227 ரன்களில சுருட்டியது. உமேஷ் யாதவ், ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். வங்கதேசம் சார்பில் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த பார்டனர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி தற்போது 14 ரன்கள் வங்கதேசத்தை விட முன்னிலையில் உள்ளது.
இதனிடையே இந்திய இன்னிங்ஸின் 44வது ஓவரில் கல்லி பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த மகேதி ஹசன் மிராஜ் ஸ்ரேயாஸ் ஐயர் கேட்சை தவறவிட்டார். தஸ்கின் அகமது இந்த ஓவரை வீசுனார். டாஸ்கின் ஓவரின் மூன்றாவது பந்தில் கூடுதல் பவுன்ஸ் இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அதனை கல்லி பகுதியில் தட்டிவிட்டார். பந்து நேராக அங்கிருந்த மெஹ்தி ஹசன் மிராஜ் நோக்கி சென்றது. கேட்ச்சை பிடிக்க அவர் தனது வலதுபுறமாக காற்றில் பறந்தார்.
mehidy Hasan Miraz has injured in the 2nd test match Ind Vs Ban#mehidyhasanmiraz #INDvBAN #TestCricket pic.twitter.com/KkEVVxguqb
— sportsliveresults (@Ashishs92230255) December 23, 2022
ஆனால், பந்து அவர் கையில் சிக்கவில்லை. காற்றில் பற்ந்த மெஹதியின் முகம் நேராக தரையில் பட்டது. இதனால் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. மீரா இதையடுத்து மைதானத்துக்கு வந்த பிசியோ மீராஜ் வெளியே அழைத்து சென்றார். இந்த கேட்ச்சை ஐயர் தவறவிட்ட நேரத்தில், அவர் 19 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்தார். கேட்சை தவறவிடுவதற்கு ஒரு பந்திற்கு முன்பு, ஐயர் பாயிண்ட் மற்றும் கல்லி நோக்கி ஒரு ஷாட் விளையாடினார், அது ஒரு பவுண்டரிக்கு சென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind vs Ban, India vs Bangladesh