ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘விக்கெட்டுகள் உடனுக்குடன் விழுந்ததால் பதற்றத்தில் இருந்தோம்’ – இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்

‘விக்கெட்டுகள் உடனுக்குடன் விழுந்ததால் பதற்றத்தில் இருந்தோம்’ – இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணி களத்தில் இறங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக மாறியது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2 ஆவது இன்னிங்ஸில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் பதற்றத்தில் இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்திருந்தது.  இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்களும் இந்தியா 314 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 231 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணி களத்தில் இறங்கியது. இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

‘ஐபிஎல் தொடரில் இவர்தான் சூப்பர் ஸ்டார்…’ – ஏலத்தில் எடுக்கப்பட்ட மும்பை வீரரை பாராட்டும் இர்பான் பதான்

அப்போது பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் உடன். ஆல்ரவுண்டர் அஷ்வின் இணைந்தார். இன்னும் 71 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், பொறுப்பை உணர்ந்து இந்த இணை சிறப்பாக விளையாடியது. இறுதியில் அஸ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் கட்டுப்பாடு முழுவதும் வங்கதேச அணியிடம் இருந்த நிலையில், அதனை மீட்டெடுத்து அஷ்வினும், ஷ்ரேயாஸும் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இதனால் இந்த டெஸ்ட் போட்டி மிகவும் த்ரில்லிங்காக அமைந்து, ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுத்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு இடைக்கால தலைவராக அப்ரிடி நியமனம்…

வெற்றிக்கு பின்னர் கேப்டன் கே.எல். ராகுல் கூறியதாவது-

விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் நாங்கள் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டோம். மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையவில்லை. எனவே எடுக்கப்பட்ட ஒவ்வொரு ரன்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. அஷ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் மிகச் சிறப்பாக பொறுப்புடன் விளையாடி உள்ளனர். வங்கதேச அணியை 2 இன்னிங்சிலும் 250 ரன்களுக்குள் நாங்கள் கட்டுப்படுத்தினோம். இதற்கு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது முக்கிய காரணம். இது எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket