ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு…

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு…

வங்கதேச விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி.

வங்கதேச விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி.

Ind vs Ban : முதல் இன்னிங்சைப் போலவை 2ஆவது இன்னிங்ஸிலும் இந்திய பவுலர்கள் சிறப்பாக வீசி, ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டாக்காவில் நடந்து வரும் 2ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வங்கதேசம் 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. சிட்டோக்ரமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 87 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

ஓபனிங் பேட்ஸ்மேன் நஜ்முல் உசைன் 5 ரன்னிலும், அடுத்துவந்த மோமினுல் ஹக் 5 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் ஷகிப் அல் ஹசன் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். முஷ்பிகுர் ரகிம் 9 ரன்னில் வெளியேறினார்.

ஐபிஎல் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்..! கவனம் பெறும் சாம் கரனின் காதலி புகைப்படங்கள்

நிதானமாக விளையாடிய தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 135 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே போனதால், பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். 98 பந்துகளை எதிர்கொண்டு 73 ரன்கள் எடுத்த தாஸ் சிராஜ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

Video : சட்டையையும் கழற்றுங்கள்... மைதானத்தில் கோபத்தின் உச்சத்திற்கு போன கோலி.. என்ன நடந்தது?

70.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்திய அணியை விட 144 ரன்கள் அதிகமாகும். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

First published:

Tags: Cricket