முகப்பு /செய்தி /விளையாட்டு / 3 வருடங்களுக்கு பிறகு டெஸ்டில் சதம்... ரசிகர்களுக்கு விருந்து படைத்த ‘கிங்’ விராட் கோலி..!

3 வருடங்களுக்கு பிறகு டெஸ்டில் சதம்... ரசிகர்களுக்கு விருந்து படைத்த ‘கிங்’ விராட் கோலி..!

விராட் கோலி சதம்

விராட் கோலி சதம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக சதம் விளாசினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இது விராட் கோலியின் 75ஆவது சதமாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியாவும், மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வென்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, அபாரமாக 480 ரன்களை விளாசியது. அதிகபட்சமாக உஸ்மன் கவாஜா 180 ரன்களும், கேமரன் க்ரீன் 114 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரில் இந்திய அணி 3-1 என்று வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். நான்காவது போட்டியில் ட்ரா செய்யும் பட்சத்தில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது, இலங்கை - நியூசிலாந்து தொடரின் முடிவை பொறுத்தே அமையும்.

இந்திய அணியில் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா, புஜாரா, ஜடேஜா, கே.எஸ். பரத் என வரிசையாக ஆட்டமிழக்க, விராட் கோலி நிதானமாக விளையாடி 241 பந்தில் தன் 28ஆவது சதத்தை எடுத்தார். இந்த சதம் மூலம் விராட் கோலி தனது 75ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதையும் படிக்க :  டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2,000 ரன்கள் குவிப்பு… புஜாரா புதிய ரிக்கார்டு

இதற்கு முன்னர் விராட் கோலி கடந்த நவம்பர் 2019ஆம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் சதத்தை எடுத்தார். விராட் கோலி சில நாட்களாக சரியான ஃபார்மில் இல்லை என கூறப்பட்ட போது, டி20 போட்டியில் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார். மேலும் ஒருநாள் போட்டியிலும் தனது சதத்தை பதிவு செய்தார். அதற்கு பின்னர் வரிசையாக சதமடித்தாலும், டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை என்றும், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

இந்த நிலையிலிருந்து தான் விராட் கோலி பேட்டில் இருந்து வந்துள்ளது அந்த சதம். தனக்கு மிகவும் பிடித்த, போட்டியாக கருதக்கூடிய ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார் விராட் கோலி. சதமடித்த உடன் தனது வழக்கமான செலிபிரேஷனை வெளிபடுத்தி, தனது செயினை முத்தமிட்டு சதத்தை வரவேற்றார்.

தற்போதுள்ள ஃபேப்-4யில், டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் 30 சதத்துடனும், ஜோ ரூட் 29 சதத்துடனும், விராட் கோலி 28 சதத்துடனும் கேன் வில்லியம்சன் 26 சதத்துடனும் முன் வரிசையில் உள்ளனர். உலக கோப்பை இறுதி போட்டி நடைபெறவுள்ள  நிலையில், விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Ind Vs Aus, India vs Australia, Virat, Virat Kohli