இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து விராட் கோலி ராகுல் திராவிட் சாதனையை உடைத்துள்ளார்.
நேற்று, ஹைதராபாத்தில் நடந்து முடிந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார். இதோடு அவுட் ஆவதற்கு முன் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு பேரிடியாக இறங்கியது, கடைசியில் ஹர்திக் பண்டியா தடவித் தடவி வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப்பட்டியலில் சச்சின் டெண்டுகல்கர் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலிக்கு அடுத்த படியாக 3வது இடத்தில் ராகுல் டிராவிட், 4வது இடத்தில் கங்குலி, 5வது இடத்தில் எம்.எஸ்.தோனி ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிங்க: பிரிதிவி ஷா மீண்டும் ஒழிப்பு? ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறும் ஐபிஎல் வீரர்
இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:- சச்சின் டெண்டுல்கர் - 664 போட்டிகள் - 34,357 ரன்கள்; விராட் கோலி - 471 போட்டிகள் - 24,078 ரன்கள்; ராகுல் திராவிட் - 404 போட்டிகள் - 24,064 ரன்கள்; கங்குலி - 421 போட்டிகள் - 18,433 ரன்கள்; எம்.எஸ்.தோனி - 535 போட்டிகள் - 17,092 ரன்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Dravid, Virat Kohli