• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 WC India vs Australia |ஆஸ்திரேலியாவுக்கு அடி கொடுக்க இந்தியா தயார்- இன்று கடைசி வார்ம்-அப் போட்டி

T20 WC India vs Australia |ஆஸ்திரேலியாவுக்கு அடி கொடுக்க இந்தியா தயார்- இன்று கடைசி வார்ம்-அப் போட்டி

விராட் கோலி- இஷான் கிஷன்

விராட் கோலி- இஷான் கிஷன்

இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை வார்ம் அப் பயிற்சியுடன் தொடங்கிய இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணியை துபாயில் எதிர்கொள்கிறது. இன்று மதியம் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

  • Share this:
    ஆஸ்திரேலிய அணியும் நியூசிலாந்தை பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இன்று இந்திய அணிக்கு எதிராகவும் ஆஸ்திரேலியா வலுவான அணியை இறக்கி வெற்றி பெறவே ஆடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆட்டம் சுவாரசியமாகவே இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அக்.24ம் தேதி முதல் போட்டியில் இறங்குவதற்கு முன்பு கடைசி வார்ம் அப் போட்டி இதுதான்.

    எனவே இதில் கடந்த போட்டியில் ஆடாத ரோகித் சர்மா இறங்குவார், ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இஷான் கிஷன் ரோகித் இறங்க வாய்ப்பு. விராட் கோலி 3ம் நிலையில் இறங்குவார். சூரியகுமார் யாதவ் சர்வதேச போட்டியின் தரநிலைகளுக்கு ஏற்றவரா என்பது இந்தப் போட்டியில் தெரிந்து விடும். அன்று சூரியகுமார் யாதவுக்கு முன்னதாக ரிஷப் பண்ட் இறக்கப்பட்ட போதே சூரியகுமார் யாதவ் மீது கோலிக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்று தெரிந்தது.

    ஆனால் பேசுபொருள் என்னவெனில் ஹர்திக் பாண்டியாவின் பார்ம். அவர் அன்று இங்கிலாந்துக்கு எதிராக உண்மையில் தடவு தடவென்று ஒரே தடவல். பவுலிங்கும் போடுவதில்லை, எனவே இவரை வெறும் பேட்டராக வைத்திருப்பார்களா அல்லது ஆல்ரவுண்டர் ஒருவரை தேர்வு செய்வார்களா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. இன்று அதே போல் புவனேஷ்வர் குமார் இருக்க மாட்டார் என்று கருத இடமுண்டு, அன்று இங்கிலாந்து இவரைப்போட்டு சாத்தி எடுத்து விட்டனர். அதே போல் பும்ராவுக்கும் ஓய்வு கொடுத்து, ஷர்துல் தாக்கூர், புதிர் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தியை நிச்சயம் இன்று கோலி ஆடவைப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் அன்று ராகுல் சாகரும் சொதப்பினார்.

    அதே போல் ஜடேஜா இன்று ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆஸ்திரேலியாவுடன் 2019 உலகக்கோப்பைக்கு முன்பான தொடரில் இந்தியா 2-0 என்று உதை வாங்கியது. அதன் பிறகு இந்திய அணி 8 தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. 2016 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு 72 டி20 போட்டிகளில் ஆடிய இந்திய அணி 45 போட்டிகளில் வென்றுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியில் ஒரு பினிஷர் தோன்றியுள்ளார் அவர்தான் இங்லிஷ், அன்று நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கடைசி ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்து வெற்றியை உறுதி செய்தார். ஆனால் பவுலிங்கில் ஆஸ்திரேலியா எப்பவும் போல் ஸ்ட்ராங், ஆடம் சாம்ப்பா என்று 17 ரன்னுக்கு 2 விக்கெட், கேன் ரிச்சர்ட்சன் 24 ரன்களுக்கு 3 விக்கெட்.

    டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா பெரிய ஆதிக்க சக்தியெல்லாம் கிடையாது, ஆனால் இதுதான் அந்த அணியை வலுவாக்கிவிடும் என்பதாகவும் யோசிக்கத் தோன்றுகிறது, எது எப்படியிருந்தாலும் முதல் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தன்னம்பிக்கையுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளவே இந்தியா கருதும்.

    Also Read: T20 Worldcup | ‘நாகின் டான்ஸ்’அணிக்கு குடைச்சலைக் கொடுத்த ஓமான் அணி- வங்கதேசம் போராடி வெற்றி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: