சொந்த மண்ணில் ஆஸி. இப்படித்திணறி பார்த்ததே இல்லை: சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar surprised by Austalia's defensive mindset | அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி தனது பிடியை நழுவ விட்டுவிடக்கூடாது என்று சச்சின் அறிவுரை கூறியுள்ளார். #AUSvIND #Ashwin

Web Desk | news18
Updated: December 7, 2018, 5:28 PM IST
சொந்த மண்ணில் ஆஸி. இப்படித்திணறி பார்த்ததே இல்லை: சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் & அஸ்வின்
Web Desk | news18
Updated: December 7, 2018, 5:28 PM IST
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறிவரும் நிலையில், இதற்குமுன் இப்படி பார்த்ததே இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, புஜாரா 123 ரன்கள் எடுத்தார்.

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், முக்கியமான 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.சச்சின் டெண்டுல்கர், அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். “டீம் இந்தியா, தன் பிடியை நழுவ விட்டுவிடக்கூடாது. இந்தச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் தங்கள் சொந்த மண்ணில் இப்படித்திணறி எனது அனுபவத்தில் பார்த்ததில்லை. அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார். தற்போது, இந்திய அணியின் கை ஓங்கியிருக்க அவர் தான் காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.இதேபோல், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு குறித்து பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Also Watch...

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...