130 ஆண்டுகால மோசமான சாதனையை முறியடித்த மார்ஷ்! என்ன சாதனை தெரியுமா?

#ShaunMarsh break unwanted 130-year-old record | 1888-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய வீரர் செய்த மோசமான சாதனையை மார்ஷ் முறியடித்துள்ளார்.

news18
Updated: December 7, 2018, 1:41 PM IST
130 ஆண்டுகால மோசமான சாதனையை முறியடித்த மார்ஷ்! என்ன சாதனை தெரியுமா?
அஸ்வின் & மார்ஷ் (AP)
news18
Updated: December 7, 2018, 1:41 PM IST
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து, 6-வது முறையாக மார்ஷ் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து 130 ஆண்டுகால மோசமான சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே சறுக்கலாக அமைந்தது. கே.எல்.ராகுல் (2), முரளி விஜய் (11), விராட் கோலி (3) என அனைவரும் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய புஜாரா சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் மார்கஸ் ஹேரிஸ் களமிறங்கினர். இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே ஆரோன் ஃபிஞ்ச் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார்.
Loading...


அடுத்து வந்த 3 முக்கியமான வீரர்களை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் ஷேன் மார்ஷ், வெறும் 2 ரன்னில் இண்டச் போல்ட் ஆகி அவுட்டானார். இதன்மூலம், 130 ஆண்டுகாலம் யாரும் முறியடிக்காத மோசமான சாதனையை மார்ஷ் முறியடித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து, 6-வது முறையாக மார்ஷ் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார். கடைசி 6 இன்னிங்சில் அவர் எடுத்த ரன்கள், 7, 7, 0, 3, 4, 2 என மொத்தம் 24 ரன்கள் எடுத்து மோசமான சாதனையைச் செய்துள்ளார். 1888-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய வீரர் செய்த மோசமான சாதனையை மார்ஷ் முறியடித்துள்ளார்.

Marsh 130-year-old record
இந்தியா உடனான ரன்னை சேர்க்காமல், கடைசி  6 இன்னிங்சில் மார்ஷ் அடித்த ரன்கள்


கடைசி 13 இன்னிங்சில் இவரின் அதிகபட்ச ரன் 40. இதற்குப் பிறகும், ஆஸ்திரேலிய அணியில் ஷேன் மார்ஷ் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்நாட்டு அணித் தேர்வுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும்.

Also Watch...

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்