அஸ்வின் சுழல் மாயாஜாலம்... அலறிய ஆஸ்திரேலியா! (வீடியோ)

Ravichandran Ashwin Collapsed Australia's Top Order | ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீழ்த்தினார். #AUSvIND #Ashwin

news18
Updated: December 7, 2018, 12:54 PM IST
அஸ்வின் சுழல் மாயாஜாலம்... அலறிய ஆஸ்திரேலியா! (வீடியோ)
விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாடும் அஸ்வின் (வலது) & ரிஷப் பந்த் (BCCI)
news18
Updated: December 7, 2018, 12:54 PM IST
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீழ்த்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக, புஜாரா 123 ரன்கள் எடுத்து இந்திய அணியைச் சரிவில் இருந்து மீட்டார்.

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலியஅணியில், தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் மார்கஸ் ஹேரிஸ் களமிறங்கினர். இஷாந்த சர்மா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் போல்டாகிய ஃபிஞ்ச் பரிதாபமாக வெளியேறினார். இஷாந்த் சர்மாவைத் தொடர்ந்து, பும்ரா, ஷமி ஆகியோர் சில ஓவர்களை வீசினர். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் சரியவில்லை.

கேப்டன் விராட் கோலி, தன்னுடைய புத்தியை தீட்டி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை களத்தில் இறக்கிவிட்டார். அஸ்வின் வீசிய 22-வது ஓவரின் முதல் பந்தில் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஹேரிஸ் (26), முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷேன் மார்ஷ்-ஐ 2 ரன்னில் வீட்டுக்கு அனுப்பினார் அஸ்வின். மார்ஷ் அடித்த பந்து பேட்டில் பட்டு ‘இண்டச் போல்ட்’ ஆனது.அதன்பின், கவனமாக விளையாடிக் கொண்டிருந்த கவாஜா (28), அஸ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர்களை சரித்ததால், வலுவான அடித்தளம் அமைக்கும் வாய்ப்பை அஸ்வின் தகர்த்தெறிந்தார். இதன்மூலம், 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.

Also watch...

First published: December 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்