முகப்பு /செய்தி /விளையாட்டு / அகமதாபாத் டெஸ்டைநேரில் கண்டு ரசிக்கப்போகும் பிரதமர் மோடி… டாஸ் நிகழ்வில் பங்கேற்பார் என தகவல்

அகமதாபாத் டெஸ்டைநேரில் கண்டு ரசிக்கப்போகும் பிரதமர் மோடி… டாஸ் நிகழ்வில் பங்கேற்பார் என தகவல்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

போட்டி நடைபெறும் நரேந்தி மோடி மைதானத்தில் 1.32 லட்சம் பேர் வரை அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்த போட்டியை பிரதமர் மோடி நேரில் கண்டு ரசிக்கவுள்ளார். இரு அணியின் கேப்டன்கள் டாஸ் போடும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும், டாஸை அவர் சுண்டுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருடன் ஆஸ்திரேலிய  நாட்டின் பிரதமர் அல்பேனிசும் பங்கேற்கிறார். இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் நடந்துள்ள நிலையில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். இதனால் இந்த டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் நரேந்தி மோடி மைதானத்தில் 1.32 லட்சம் பேர் வரை அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பேனிஸ் ஆகியோர் நாளை தொடங்கும் முதல் நாள் ஆட்டத்தை நேரில் கண்டு ரசிக்கவுள்ளனர்.

இந்நிலையில் டாஸ் போடும் நிகழ்வில் பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பேனிசும் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமரின் நேர்காணல் ஒன்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தானும், பிரதமர் மோடியும் டாஸ் நாணயத்தை சுண்டப் போவதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். டாஸ் நாணயத்தை சுண்டுவது மோடியா அல்லது நீங்களா என்று ஆஸ்திரேலிய பிரதமரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர், ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. மோடி இந்திய பிரதமர் என்பதாலும், போட்டி இந்தியாவில் நடப்பதாலும் அவர்தான் டாஸ் நாணயத்தை சுண்டுவார் என்று எதிர்பார்க்கிறேன்’ என கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket