Home /News /sports /

CWG 2022: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்

CWG 2022: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்

இந்திய மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங்

இந்திய மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங்

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் முதன் முதலாக அறிமுகமாகிறது. இன்னும் சற்று நேரத்தில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா மகளிர் அணியை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    இந்தியா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், அணிகள் ஏ பிரிவிலும்

    இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை குரூப் பியிலும் உள்ளன.

    ஆட்டம் 3:30 மணிக்குத் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணி: அலிசா ஹீலி (வி.கீ), பெத் மூனி, மேல் லேனிங் (கேப்டன்), தஹீலா மெக்ராத், ரேச்சல் ஹெய்ன்ஸ், ஆஷ்லி காட்னர், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜொனாசன், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்

    இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வெர்மா, யாஸ்திகா பாட்டியா (விகீ), ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், மேக்னா சிங், ரேணுகா தாகூர்.

    ஆஸ்திரேலியா வலுவான அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2020 டி20 உலகக்கோப்பையில் முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்ததால் இந்த முறையும் அதை எதிர்பார்க்கலாம்.

    இந்தியா இப்போது டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Commonwealth Games, Cricket, India vs Australia, T20

    அடுத்த செய்தி