நாளை கடைசி போட்டி... இந்திய அணியில் என்ன மாற்றம்...?

Ind vs Aus: #KLRahul, #RishabhPant's final opportunity? | இரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை (மார்ச் 13) நடைபெற உள்ளது.

நாளை கடைசி போட்டி... இந்திய அணியில் என்ன மாற்றம்...?
இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
  • News18
  • Last Updated: March 12, 2019, 1:12 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி புதிய திட்டம் தீட்டியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ராஞ்சி மற்றும் மொஹாலியில் நடந்த 3-வது, 4-வது போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. குறிப்பாக, மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது.


Australia Team, ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (CricketAustralia)


இமாலய இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.

அதனால், டெல்லியில் நாளை (மார்ச் 13) நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது.

Loading...

கடைசி போட்டியைப் பொறுத்தவரை, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்-க்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். இதில், நன்றாக விளையாடினால் உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் உலகக் கோப்பை கனவு கலைந்துவிடும்.

Rishabh Pant, ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட். (Image AP)


அம்பதி ராயுடுக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் திரும்ப சேர்க்கப்பட வாய்ப்பில்லை. விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் இருப்பார்கள்.

ரிஷப் பண்ட் வாய்ப்பை பயன்படுத்தினால் உலகக் கோப்பை அணியில் 2-வது விக்கெட் கீப்பராக இடம்பெறலாம்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா கூட்டணி இருக்கும்.

இந்திய உத்தேச லெவன் அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா

ராணுவ தொப்பி விவகாரம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான்!

தயவு செய்து தோனியுடன் ரிஷப் பண்ட்-ஐ ஒப்பிடாதீர்கள்: ஷிகர் தவான்

Photos: பத்ம விருதுகள் பெற்ற விளையாட்டு பிரபலங்கள்!

விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

Also Watch...

First published: March 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...