இந்திய பவுலர்களே உஷார்: வாசிம் அக்ரம் எச்சரிக்கை!

Indian bowlers will find it tough in Australia Test | 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை 0-2 என இழந்ததே டெஸ்ட்டில் அவரது ஓய்வுக்கு காரணமாக இருந்தது.

இந்திய பவுலர்களே உஷார்: வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
வாசிம் அக்ரம் (AP)
  • News18
  • Last Updated: November 26, 2018, 10:37 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதனை அடுத்து, இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் தோல்வியே அப்போதைய டெஸ்ட் அணியின் கேப்டனான தோனியின், கேப்டன் பதவி பறிபோவதற்கும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுவதற்கும் பிள்ளையார் சுழி போட்டது. இந்த தொடருக்கு பின்னரே, டெஸ்ட்டில் இருந்து தோனி விலகினார். தற்போது, டி-20 தொடரை சமன் செய்ய உதவிய கேப்டன் விராட் கோலிக்கு இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. இந்திய அணியை தூக்கி நிறுத்த கோலிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


விராட் கோலி | Virat kohli
விராட் கோலி (Twitter/BCCI)


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சில எச்சரிக்கைகளை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கூறியுள்ளார். அதில், “ஆஸ்திரேலியாவின் சூழல்களுக்கு ஏற்ப தங்களை சரிசெய்துகொள்ளும் முயற்சியில் இந்திய பேட்ஸ்மேன்களை விட, இந்திய பவுலர்களுக்கே அதிக சிரமம் உள்ளது. இந்திய அணி இஷாந்த் சர்மா தலைமையிலான 5 பேர் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணியைக் கொண்டுள்ளது. அடிலெய்ட் மற்றும் மெல்போர்ன் ஆடுகளங்கள் அவ்வளவு பவுன்சர்கள் இருக்காது. ஆனால், பிரிஸ்பேனில் பந்து சிறிது பவுன்சர் ஆகும். பெர்த் மைதானம் புதிய ஆடுகளம் என்பதால் அதுபற்றி எனக்குத் தெரியாது” என்று கூறினார்.

Wasim Akram
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் (Image: Getty)
“இந்தியா, பாகிஸ்தான் அல்லது துணைக் கண்டத்தைச் சேர்ந்த அணிகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது பேட்ஸ்மேன்களே தடுமாறுகின்றனர். ஆனால், இந்திய அணியின் பேட்டிங் மிகவும் சீராக உள்ளது” என்று அக்ரம் தெரிவித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.

Also See..

First published: November 26, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்