Home /News /sports /

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்திய டெஸ்ட் அணி. (BCCI)

இந்திய டெஸ்ட் அணி. (BCCI)

India name 13-man squad for Sydney Test | 13 பேர் கொண்ட இந்திய அணியில் மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்ட தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாட இருக்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (03.01.19) தொடங்குகிறது.

Indian cricket team, இந்திய அணி
பயிற்சியின் போது இந்திய அணி வீரர்கள். (BCCI)


இந்நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 13 பேர் கொண்ட அணியில் மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்ட தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

KL Rahul Bowled, கே.எல்.ராகுல்
பெர்த் டெஸ்டில் போல்டான கே.எல்.ராகுல். (BCCI)


வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் விலகியிருந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், காயத்தின் தன்மையைப் பொறுத்து டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு தான், அவர் களமிறங்குவாரா? மாட்டாரா? எனத் தெரியவரும்.

Jadeja, Ashwin, ஜடேஜா , அஸ்வின்
பயிற்சியின்போது ஜடேஜா மற்றும் அஸ்வின். (Getty Images)


ரோகித் சர்மா, தனது குழந்தையைப் பார்க்க இந்தியா சென்றுவிட்டதால், அவர் 4-வது போட்டியில் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விபரம்: விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், மாயங் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்) ஜடேஜா, குல்தீவ் யாதவ், அஸ்வின், முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: Hardik Pandya, Ind Vs Aus, India vs Australia 2018, Kl rahul, R Ashwin, Virat Kohli

அடுத்த செய்தி