சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கு, வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிலையில், 3வது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை 13ஆம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.
1,500 முதல் 10,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் 13ஆம் தேதி முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் நிலையில், குறைந்தபட்ச விலையான ,1200 ரூபாய் டிக்கெட்டுகள் மட்டும், சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுன்டரில் வரும் 18ஆம் தேதி நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், போட்டி நடைபெறும் நாளன்று செல்போனைத் தவிர, வேறு எந்த மின்னணு மற்றும் மின்சார சாதனங்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வளர்ப்பு பிராணிகளுக்கு அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு, கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகம் உள்ளிட்டவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chepauk, India vs Australia, Indian cricket team