இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. ஐசிசி தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளும் மோதுவதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே, இந்த தொடரை காண ஆவலாக உள்ளது.
நாக்பூரில் இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில், இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் வலு சேர்க்கின்றனர். திருமணம் முடிந்து துணை கேப்டன் கே.எல். ராகுலும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அணியில் சூர்ய குமார் யாதவ் களமிறக்கப்படுவாரா அல்லது புஜாரா களமிறக்கப்படுவாரா என்றும் விவாதம் எழுந்துள்ளது. சாலை விபத்தில் காயமடைந்ததால் ஓய்வில் உள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு பதில் கே.எஸ்.பரத் இறங்குவார் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் 3-வது சுழற்பந்து வீச்சாளராக அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. ஆஸ்திரேலியா அணியும் லயன் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காண்கிறது. 15-வது முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உடனான டெஸ்ட் போட்டியை வெல்வது அவ்வளவு எளிதாக இருக்காது என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருந்தார். ஆனால் பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி மிரட்டினார். வார்னர், லபுஷேன் உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை செயல்படுத்துவார்கள். இவர்கள் அனைவரும் உள்ள போட்டி என்பதால் பொழுதுபோக்கிற்கு ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது. இதில், 3-0 என தொடரை கைப்பற்றினால் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக விளையாடும் வாய்ப்பை இந்தியா பெறும்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, வருகின்ற ஜூன் 7-ம் தேதி தொடங்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை நடைபெறும் இந்த தொடரின் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது பட்டியலில் ஆஸ்திரேலியா 78 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 59 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind Vs Aus, India captain Rohit Sharma, INDvAUS, Virat Kohli