இந்திய அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு!

#IndvAus, 5th ODI at Delhi: Bowlers Lead Fightback and Restrict Australia to 272 | நிதானமாக விளையாடிய கவாஜா சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு!
ஆஸி. விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கோலி. (ICC)
  • News18
  • Last Updated: March 13, 2019, 5:26 PM IST
  • Share this:
டெல்லியில் நடைபெற்று வரும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 273 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கே.எல்.ராகுல், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


India XI
இந்திய லெவன் அணி. (BCCI)


தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கவாஜா களமிறங்கினர். பிஞ்ச் 27 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய கவாஜா (100) சதம் அடித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் அவுட்டானார். பொறுமையாக விளையாடிய ஹேண்ட்ஸ்கோம்ப் அரைசதம் அடித்து வெளியேறினார்.

Usman Khawaja, கவாஜா,
சதம் அடித்த கவாஜா. (BCCI)


Loading...

பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

Jadeja, ஜடேஜா
மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா. (ICC)


இந்தியா சார்பில், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Also Watch...

First published: March 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...