Home /News /sports /

VIDEO: பேட்டுக்கு பவர் ஏற்றிய கோலி... கடுப்பான அம்பையர்...!

VIDEO: பேட்டுக்கு பவர் ஏற்றிய கோலி... கடுப்பான அம்பையர்...!

மைதானத்தில் பேட்டுக்கு பவர் ஏற்றிய கோலி. (Video Garab)

மைதானத்தில் பேட்டுக்கு பவர் ஏற்றிய கோலி. (Video Garab)

Indian skipper #ViratKohli departs for cheap | போட்டி விதிமுறைக்கு எதிராக பந்தை தொட்ட விராட் கோலி பந்தைச் சேதப்படுத்த முயற்சித்தாரா என சர்ச்சை எழுந்துள்ளது. #AUSvIND #FinalTest #SydneyTest

  • News18
  • Last Updated :
சிட்னியில் டெஸ்டில் போட்டியின்போது கேப்டன் விராட் கோலி, அவரே பந்தை தூக்கிப் போட்டு அடித்து விளையாடியதால் அம்பயர் ஆத்திரம் அடைந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (ஜன.3) தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 9 ரன்னிலும், மயங் அகர்வால் 77 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

கோலியைக் குறிவைத்து தூக்கிய ஹேசில்வுட்

3-வது வீரராக கேப்டன் விராட் கோலி களம்புகுந்தார். முக்கியமான போட்டி என்பதால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொள்ள கோலி முயற்சித்தார். ஏற்கனவே, தீட்டப்பட்ட திட்டத்தின்படி, கோலியைக் குறிவைத்து ஹேசில்வுட் தூக்கினார்.



ஷார்ட் டெலிவெரியாக வீசிய பந்தை லெக் சைடில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு, பேட்டை சுழற்றினார் கோலி. ஆனால், பந்து பேட்டின் முனைப்பகுதியில் பேட்டு பின்னாடி சென்று விக்கெட் கீப்பர் டிம் பெய்னின் கையில் தஞ்சம் அடைந்தது. இதனால், 23 ரன்கள் எடுத்த நிலையில் கோலி பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

கோலியின் செயலால் அம்பயர் ஆத்திரம்

52-வது ஓவர் முடிந்ததும், அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கிய விராட் கோலி, அதை மேலே தூக்கிப்போட்டு பேட்டால் அடித்து விளையாடினார். இதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த அம்பயர் உடனே பந்தை வாங்கிக்கொண்டார். இதற்கு அடுத்த ஓவரிலேயே கோலி ஆட்டமிழந்தார்.



போட்டி விதிமுறைக்கு எதிராக பந்தை தொட்ட விராட் கோலி பந்தைச் சேதப்படுத்த முயற்சித்தாரா என சர்ச்சை எழுந்துள்ளது.

Also Watch.. எங்கிருந்தாலும் எங்களுக்கு பயிற்சியளிக்க... மறைந்த பயிற்சியாளருக்கு சச்சின் இரங்கல்...

<iframe class="video-iframe-bg-color iframe-onload" onload="resizeIframe(this)" id="story-90241" scrolling="no" frameborder="0" width="100%" src="https://tamil.news18.com/embed/videos/OTAyNDE=/"></iframe>

Also Watch.. தொடங்கியது சிட்னி டெஸ்ட் - வாய்ப்பை வீணடித்த கே.எல்.ராகுல்...

<iframe class="video-iframe-bg-color iframe-onload" onload="resizeIframe(this)" id="story-90175" scrolling="no" frameborder="0" width="100%" src="https://tamil.news18.com/embed/videos/OTAxNzU=/"></iframe>
Published by:Murugesan L
First published:

Tags: Ind Vs Aus, India vs Australia, Sydney, Virat Kohli

அடுத்த செய்தி