முகப்பு /செய்தி /விளையாட்டு / கங்குலியின் சாதனையை சமன் செய்த ‘கிங்’ கோலி!

கங்குலியின் சாதனையை சமன் செய்த ‘கிங்’ கோலி!

வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கோலி. (BCCI)

வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கோலி. (BCCI)

Virat Kohli equals Sourav Ganguly Record | 37 ஆண்டுகளுக்குப் பின், மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

வெளிநாட்டு மண்ணில் இந்திய கேப்டனாக அதிக வெற்றி பெற்ற சவுரவ் கங்குலியின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

Indian Test Team
அடிலெய்டில் வெற்றியைக் கொண்டாடிய இந்திய வீரர்கள் (BCCI)

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி என்ற பெருமையை விராட் கோலி தலைமையிலான அணி பெற்றது. பெர்த் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இரண்டு வெற்றிகளுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 37 ஆண்டுகளுக்குப் பின், மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியா பெறும் 150-வது வெற்றி இதுவாகும்.

BCCI, Indian Team Celebration
மெல்போர்னில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)

வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை சவுரவ் கங்குலி 11 வெற்றிகளுடன் தன்வசம் வைத்திருந்தார். தற்போது, அந்த சாதனையை விராட் கோலி சமன் செய்தார். கங்குலி 28 டெஸ்டில் தலைமையேற்று செய்த சாதனையை, விராட் கோலி 24 டெஸ்டில் செய்துள்ளார்.

விராட் கோலி, Indian Team
வெற்றியைக் கொண்டாடும் கேப்டன் விராட் கோலி. (BCCI)

முன்னதாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாஃப்ரிக்கா ஆகிய மூன்று வெளிநாடுகளிலும் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் மற்றும் முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.

#AUSvIND இந்தியா அபார வெற்றி - தொடரில் முன்னிலை

Also Watch...

First published:

Tags: Ind Vs Aus, India vs Australia 2018, Sourav Ganguly, Virat Kohli