முகப்பு /செய்தி /விளையாட்டு / தொட்ரா பார்க்கலாம்... வைரலாகும் விராட் கோலி - டிம் பெய்ன் மோதல் வீடியோ!

தொட்ரா பார்க்கலாம்... வைரலாகும் விராட் கோலி - டிம் பெய்ன் மோதல் வீடியோ!

களத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - டிம் பெய்ன். (Twitter)

களத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - டிம் பெய்ன். (Twitter)

Tim Paine, Virat Kohli take rivalry to whole new level | அம்பயரிடம் டிம் பெய்ன் புகார் அளித்ததால், விராட் கோலியிடம் அம்பயர் சாமதானம் பேசினார். #AUSvIND #PerthTest

  • 1-MIN READ
  • Last Updated :

பெர்த் டெஸ்டின் 4-ம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும் மோதிய காட்சி வைரலாகி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இதனை அடுத்து, ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய தொடக்கவரிசை வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 132 ரன்கள் எடுத்தது.

போட்டி முடிந்து பெவிலியன் திரும்பியபோது, கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும் ஏதோ ஆக்ரோசமாக பேசிக்கொண்டனர். இந்த மோதல், 4-ம் நாள் ஆட்டத்திலும் தொடர்ந்தது.

71-வது ஓவரின்போது, ரன் எடுக்க ஓடிவந்த டிம் பெய்ன், அங்கு நின்றிருந்த விராட் கோலி மீது உரசிச்சென்றார். இதுகுறித்து அம்பயரிடம் டிம் பெய்ன் புகார் அளித்ததால், விராட் கோலியிடம் அம்பயர் சமதானம் பேசினார்.

175 ரன்கள் முன்னிலை 4-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Also Watch...

First published:

Tags: India vs Australia, INDvAUS, Tim Paine, Virat Kohli