இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் டி-20 போட்டி! இந்திய அணியில் முக்கிய மாற்றம்

பதினொரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணியும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

Karthick S | news18
Updated: August 3, 2019, 5:00 PM IST
இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் டி-20 போட்டி! இந்திய அணியில் முக்கிய மாற்றம்
பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்
Karthick S | news18
Updated: August 3, 2019, 5:00 PM IST
இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அமெரிக்காவில் இன்று இரவு 8 மணிக்கு முதலாவது போட்டி நடைபெறுகிறது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதியுடன் வெளியேறிய இந்திய அணி, அதனைத் தொடர்ந்து, மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான தொடரில் பங்கேற்கிறது. மூன்று 20 ஓவர் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்தப் போட்டிகள், கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்க கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன.

இதன் முதலாவது 20 ஓவர் போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள லாடர்கில்லில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் கருணால் பாண்டியா, ஷிரேயாஸ் ஐயர், வாசிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மகேந்திர சிங் தோனி ராணுவ பயிற்சிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த், அணியில் இடம்பெற்றுள்ளார்.


மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக ஜாஸன் முகமது பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதினொரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணியும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

நடப்பு உலக சாம்பியனான மேற்கு இந்திய தீவுகள் அணி, 20 ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேசமயம், இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா இடையேயான கருத்து வேறுபாடு, உலக கோப்பை கிரிக்கெட் தோல்வி போன்றவற்றிற்கு மத்தியில் மேற்கு இந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. இதனால், இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also see:

Loading...

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...