Home /News /sports /

டீன் எல்கர் சிறப்பான ஆட்டம்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி

டீன் எல்கர் சிறப்பான ஆட்டம்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி

டீன் எல்கர்

டீன் எல்கர்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணி தொடரை சமன்செய்துள்ளது. அதனால் மூன்றாவது போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்தியா தென்ஆப்பிரிக்காவுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பெர்க்கிலுள்ள வாண்டெரஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தத் தொடரின் முதல்போட்டியில் கே.எல்.ராகுல் மட்டுமே அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க முதல் இன்னிங்ஸில் இந்திய 10 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அதனையடுத்து, களமிறங்கிய தென்ஆப்பிரிக்காவும் முதல்இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. அதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன் பிறகு 240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. டீன் எல்கர் 46 ரன்களுடனும் அதிரடி வீரர் வான் டெர் டியூசன் 11 ரன்களுடனும் இருக்கின்றனர்.

    கோலி ஸ்டைலில் சண்டைக்கோழி ஆகாதீங்க பும்ரா, பவுலிங்கில் கவனம் செலுத்துங்க



     இந்நிலையில் ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இன்று நடைபெற இருந்த நான்காம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கேப்டன் டீன் எல்கர் சிறப்பாக ஆடினார்.


    கடைசிவரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தென்ஆப்பிரிக்கா 243 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அணி தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: India vs South Africa, Team India

    அடுத்த செய்தி