INDvNZ | இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள்... கோலி வியூகம்
INDvNZ | இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள்... கோலி வியூகம்
ICC World Cup 2019
ICC World Cup 2019 | India vs Newzeland | மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் இதுவரை பெரிய அளவில் சோபிக்காமல் உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது
நியூசிலாந்துக்கு அணிக்க எதிரான போட்டியில் இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்களுக்கு வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் மோத உள்ளது.
இந்திய அணி பலம்வாய்ந்ததாக பேட்டிங் வரிசையை கொண்டிருந்தாலும் பயிற்சி போட்டியின் போது நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. அதனால் இன்றையப் போட்டி இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும். இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக இருப்பது தொடக்க வரிசை வீரர்கள் தான்.
ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி அணிக்கு பலமாக உள்ளனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் இதுவரை பெரிய அளவில் சோபிக்காமல் உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. வேகப் பந்துவீச்சில் பும்ரா, ஷமி பக்கபலமாக உள்ளனர்.
நியூசிலாந்து எதிரான போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை போட்டியில் போது ஓய்வு அளிக்கப்பட்ட முகமது ஷமி, சஹால் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்தி, புவனேஸ் குமார் அணியில் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் 72 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். மேலும் மான்செஸ்டர் மைதானத்தின் ஆடுகளம் மந்தமாக இருப்பதால் இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட வாய்ப்பில்லை என்பதால் ஆல்-ரவுண்டர் ஜடேஜா அணியில் தொடர்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய அணி : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா
Also Watch
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.