பெய்னுக்கு பெயின்.. ரூட்டுக்கு ‘ரூட்’ காட்டிய ரிஷப் பந்த்; கட்டுப்படுத்த முடியவில்லை: இங்கிலாந்து கேப்டன் ஒப்புதல்

பெய்னுக்கு பெயின்.. ரூட்டுக்கு ‘ரூட்’ காட்டிய ரிஷப் பந்த்; கட்டுப்படுத்த முடியவில்லை: இங்கிலாந்து கேப்டன் ஒப்புதல்

ஜோ ரூட்

நாம் உண்மையில் வெற்றியை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தோம், ஆனால் ரிஷப் பந்த், சுந்தர் ஆட்டத்தை மாற்றி விட்டனர். ரிஷப் பந்த் பேட் செய்யும் விதம் பவுலர்கள் அவர் மீது அழுத்தம் கொடுப்பதை முறியடித்து விட்டது.

 • Share this:
  ரிஷப் பந்த் பேட் செய்யும் விதம் பவுலர்களால் அவரை அழுத்தம் கொடுத்து வீழ்த்த முடியாது என்பதையே காட்டுகிறது என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்தார்.

  ஆஸ்திரேலியாவில் வாய்ஜாலம் காட்டிய கேப்டன் டிம் பெய்னுக்கு பெயின் கொடுத்த ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கே ரூட்டைக் கொடுத்து ஆட்டத்தை அவரிடமிருந்து பறித்தார், விளைவு இந்தியா ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் உள்ளது.

  அன்று ரிஷப் பந்த் டாம் பெஸ் பந்தில் முன்னமேயே பிளம்ப் எல்.பி. ஆனார். நடுவர் நாட் அவுட் என்று மோசடி செய்ய, ரூட்டின் மேல் முறையீடு ‘அம்பயர்ஸ் கால்’ ஆனதால் தோல்வியடைந்தது, ஆனால் அதே இங்கிலாந்து பேட் செய்யும் போது கிட்டத்தட்ட ஜோ ரூட் இதே பாணியில் எல்.பி.ஆனார் அவருக்கு கையை உயர்த்தினார், மீண்டும் ஜோ ரூட் மேல் முறையீடு செய்தார் அம்பயர்ஸ் கால், ஒரே மாதிரியான அவுட்கள், இரண்டுமே அம்பயர்ஸ் கால், ஆனால் ரிஷப் பந்துக்கு நாட் அவுட் ஜோ ரூட்டுக்கு அவுட். இதுதான் இந்திய அம்பயரிங். இதை ஒருவரும் பேசவும் இல்லை. எழுதவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. இருமுறையும் ரிஷப் பந்த் சிரித்தார். ஒரு தீர்ப்பு ஆட்டத்தையே திருப்பிப் போட்டது பற்றி சுனில் கவாஸ்கர் பேசுவாரா? கோலி பேசுவாரா? ரவிசாஸ்திரி பேசுவாரா?

  ரிஷப் பந்த் அதன் பிறகு ஆடிய தாறுமாறு அதிரடி ஆட்டம் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து விட்டது என்பதே உண்மை.
  ஜாக் லீச்சை சிக்ஸ் விளாசிய ரிஷப் பந்த்.


  இந்நிலையில் ஜோ ரூட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ஏமாற்றம்தான், நான் மீண்டும் இந்தியாவை பாராட்டுகிறேன். நம் திறமையை அவர்கள் திறமை மூழ்கடித்து விட்டது. எதிர்காலத்தில் இத்தகைய இடங்களில் சென்று ஆடும்போது அதற்கான சீரிய உத்திகளை வகுக்க வேண்டும்.

  நாம் உண்மையில் வெற்றியை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தோம், ஆனால் ரிஷப் பந்த், சுந்தர் ஆட்டத்தை மாற்றி விட்டனர். ரிஷப் பந்த் பேட் செய்யும் விதம் பவுலர்கள் அவர் மீது அழுத்தம் கொடுப்பதை முறியடித்து விட்டது.

  ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற ஒரு பவுலரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார் என்றால் அது சாதாரண தைரயமோ திறமையோ அல்ல. இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரிஷப் பந்த் வந்து ஆடிவிட்டார். இப்படி நாம் சாதக தருணங்களை சரிவரப் பயன்படுத்தவில்லை.

  ரிஷப் பந்த்தை அமைதியாக வைப்பது கடினம். பிரில்லியண்ட் பேட்டிங்கை அந்தத் தருணத்தில் கண்டோம். எனவே அந்தப் பிட்ச்களில் அவர்களது அனுபவம் நம்மை மூழ்கடித்து விட்டது. இதுதான் வித்தியாசம்,பெரிய வித்தியாசம். ” என்றார் ஜோ ரூட்.
  Published by:Muthukumar
  First published: