HOME»NEWS»SPORTS»cricket ind v eng 2021 hazlewood hopes england will beat india in test series to help australia play wtc final mut

எத்தனை பேராசை!- இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டிக்குக் கொண்டு செல்லுமாம், சொல்கிறார் ஹேசில்வுட்

இந்நிலையில் இங்கிலாந்து அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றினாலோ, அல்லது தொடரை 2-2 என்று ட்ரா செய்தாலோ, அல்லது 1-1 என்று டிரா செய்தாலோ இந்தியா அவுட், ஆஸ்திரேலியா முன்னேறும்.

  • Share this:

இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில்  முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்களில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து பிறகு 2வது டெஸ்ட் போட்டிக்கு பி டீமை இறக்கி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் பகலிரவு பிங்க் நிறப்பந்து டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, இதனையடுத்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட், இங்கிலாந்து எப்படியாவது இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற செய்து விடும் என்று தன் பேராசையை வெளியிட்டுள்ளர்.

மே மாதம் லார்ட்ஸில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது, இதில் இங்கிலாந்து தற்போது முதலிடம் வகிக்கிறது. நியூஸிலாந்து 2ம் இடத்தில் உள்ளது.

நடப்புத் தொடரை இங்கிலாந்து 2-2 என்று டிரா செய்தால் இந்தியா அதோகதிதான், ஆஸ்திரேலியா இறுதிக்குச் சென்று விடும். ஆஸ்திரேலியா தன் தென் ஆப்பிரிக்கா பயணத்தை ரத்து செய்ததால் சிக்கலில் மாட்டியது.

இந்நிலையில் இங்கிலாந்து அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றினாலோ, அல்லது தொடரை 2-2 என்று ட்ரா செய்தாலோ, அல்லது 1-1 என்று டிரா செய்தாலோ இந்தியா அவுட், ஆஸ்திரேலியா முன்னேறும்.

இந்நிலையில் சமீபமாக ரகானே தலைமை இந்திய அணியிடம் 2-1 என்று தொடரை இழந்த ஆஸ்திரேலியா அணியின் ஹேசில்வுட் கூறியதாவது:

நான் சாதாரண சூழ்நிலையில் இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை விரும்பிப் பார்க்க மாட்டேன். ஆனால் நம் அணியின் விதி இதில் அடங்கியிருப்பதால் அவ்வப்போது இங்கிலாந்து ஆட்டத்தைக் கவனித்து வருகிறேன்.

இங்கிலாந்து நமக்காக நல்ல வேலை செய்யும் என்றே நினைக்கிறேன். இது ஒரு விசித்திரமான மன நிலைதான், அதாவது இந்தியாவிடம் உதை வாங்கிய பிறகு இங்கிலாந்து வென்றால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது ஒரு விநோத குணம்தான்.

தென் ஆப்பிரிக்கா தொடரை ரத்து செய்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் எங்கள் வாய்ப்பு சிக்கலாகி விட்டது. எந்த ஒரு டூரையும் இழக்கக் கூடாது.

இப்போது இறுதியில் விளையாடுவது எங்கள் கையில் இல்லை, வேறு வழியில்லாமல் இந்தியா-இங்கிலாந்து தொடரைப் பார்த்து வருகிறோம்.

இந்தியாவுக்கு எதிராக எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். இப்போது யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்து பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாகக் கடைசி 2 போட்டிகளில். மெல்போர்னில் நாங்கள் சரியாக ஆடவில்லை அதனால் அங்கு செம உதை வாங்கினோம்.

பிரிஸ்பன் டெஸ்ட் கடைசி நாளில் இந்தியா பிரமாதமாக ஆடினர். அந்த நாளில் சிறப்பாக ஆடும் அணியினால் தோல்வியடைந்தோம் என்பதில் வருத்தத்திற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறு கூறினார் ஹேசில்வுட்.
Published by:Muthukumar
First published: