டெஸ்ட் போட்டிகளில் அதிரடி மாற்றம்! புதிதாக ஜொலிக்க உள்ள வீரர்கள்

Vijay R | news18
Updated: July 23, 2019, 8:17 PM IST
டெஸ்ட் போட்டிகளில் அதிரடி மாற்றம்! புதிதாக ஜொலிக்க உள்ள வீரர்கள்
கோப்பு படம்
Vijay R | news18
Updated: July 23, 2019, 8:17 PM IST
ஒரு நாள், டி20 போட்டிகளில் புது புது மாற்றங்களை கொண்டு வந்தது போல் டெஸ்ட் போட்டிகளிலும் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் ஐசிசி  புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வராமல் பாரம்பரியத்தை காத்து வந்தனர். ஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியில் அவர்களின் பெயரோ அல்லது எண்ணோ இடம் பெறாது. முழுவதும் வெண்மை நிறத்திலான ஜெர்சியை மட்டும் தான் அணிந்து விளையாடுவார்கள்.


டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது ஜெர்சியில் அவர்களது பெயர் மற்றும் விரும்பும் எண் இடம்பெற உள்ளது.



இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற உள்ள ஆஷஸ் தொடரிலிருந்து இந்த புதிய முறையை அமல்படுத்த உள்ளது. இங்கிலாந்து வீரர்களின் புதிய டெஸ்ட் ஜெர்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Also Read : தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் அசாரூதின்!

Also Read : பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி...! கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்

Also Watch

First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...