வேறு விளையாட்டாக இருந்தால் விராட் கோலி வெளியேற்றப்பட்டிருப்பார்: அசிங்கமான நடத்தையை விமர்சிக்கும் டேவிட் லாய்ட்

வேறு விளையாட்டாக இருந்தால் விராட் கோலி வெளியேற்றப்பட்டிருப்பார்: அசிங்கமான நடத்தையை விமர்சிக்கும் டேவிட் லாய்ட்

கோலி-நடுவர் வாக்குவாதம்

சரி இந்தியா இந்தப் போட்டியில் 600 ரன்களை எடுத்தது என்றும் ரோஹித் சதம் என்றும் நம்பர் 8 அஸ்வின் சதம் என்றும் என்னிடம் கூறலாம். இந்த டெஸ்ட் போட்டியும் அதே மைதானம் தான் 15 அடி தள்ளிதான் அந்தப் பிட்சும் இருக்கிறது. ஆனால் ஒரு பிட்ச் தயாரிக்கப்பட்டது இன்னொன்று தயாரிக்காமலேயே விடப்பட்ட பிட்ச்.  இந்தப் பிட்ச் ஒரு தர்ம சங்கடம். 

 • Share this:
  நடுவர் நிதின் மேனனுடன் அசிங்கமாக வாக்குவாதம் புரிந்து நடுவரை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதற்கு விராட் கோலி வேறு விளையாட்டாக இருந்திருந்தால் இந்நேரம் வெளியேற்றப்பட்டு 3 போட்டிகள் உட்கார வேண்டியதுதான், ஆனால் இங்கு மேட்ச் ரெஃப்ரி  ஜவகல் ஸ்ரீநாத் ஹீ.. ஹீ என்று சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  நெருக்கமான எல்.பி.டபிள்யூ முறையீட்டில் ஜோ ரூட்டுக்கு நிதின் மேனன் அவுட் கொடுக்க மறுத்தார். விராட் கோலி ரிவியூ செய்தார், ஆனால் அது அம்பயர்ஸ் கால் என்று வந்தது.  கோலி ஆவேசமடைந்து அசிங்கமாக நடுவரிடம் நடந்து கொண்டார்.

  இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் டெய்லி மெயிலில் எழுதும் போது, “விராட் கோலி மீது எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் கிடையாது இல்லையா? படுமோசம், கிரிக்கெட் காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
  ஒரு நாட்டு அணியின் கேப்டன் கிரிக்கெட்டை நடத்தும் கள அதிகாரியான நடுவரை விமர்சனம் செய்கிறார், தரம் தாழ்த்துகிறார், அச்சுறுத்துகிறார். ஆனால் அவர் தொடர்ந்து ஆட அனுமதிக்கப்படுகிறார். இது எப்படி நடக்க முடியும்?

  வேறு விளையாட்டாக இருந்தால் அவர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பார். கோலியை அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் நியாயமாகப் பார்த்தால் ஆட அனுமதிக்க முடியாது.
  கிரிக்கெட்டிலும் மஞ்சள் அட்டை., சிகப்பு அட்டைக் காட்டி வெளியேற்றப்பட வேண்டும், கோலியின் செயலுக்கு நேரடியாக சிகப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏ/சி அறையில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீநாத் ஒரு வார்த்தை கூட இதைக் கண்டிக்கவில்லை. மூன்றரை நாட்கள் ஸ்ரீநாத் எதுவும் கூறவில்லை.

  என்னைப் பொறுத்தவரையில் இந்த டெஸ்ட் போட்டி ஒரு நிகழ்வேயல்ல. நேர்மையாகக் கூற வேண்டுமெனில் முதல் நாள் ஆட்டத்திலேயே பந்து பிட்ச் ஆனவுடன் மண் பெயர்ந்து வந்ததுமே நான் இந்த போட்டியில் ஆர்வத்தை இழந்து விட்டேன். அப்போது என்னவெல்லாம் எனக்குத் தெரிய வேண்டுமோ அத்தனையும் தெரிந்து விட்டது. முடிவு தவிர்க்க முடியாதது. ரெக்கார்டுக்காக சொல்ல வேண்டுமெனில் இந்தியா நன்றாக ஆடினர், உதவும் பிட்சில் இங்கிலாந்து ஸ்பின்னர்களிடம் போதாமை காணப்பட்டது.

  சரி இந்தியா இந்தப் போட்டியில் 600 ரன்களை எடுத்தது என்றும் ரோஹித் சதம் என்றும் நம்பர் 8 அஸ்வின் சதம் என்றும் என்னிடம் கூறலாம். இந்த டெஸ்ட் போட்டியும் அதே மைதானம் தான் 15 அடி தள்ளிதான் அந்தப் பிட்சும் இருக்கிறது. ஆனால் ஒரு பிட்ச் தயாரிக்கப்பட்டது இன்னொன்று தயாரிக்காமலேயே விடப்பட்ட பிட்ச்.  இந்தப் பிட்ச் ஒரு தர்ம சங்கடம்.

  எளிமையான கேள்வி- ஏன்? ஐசிசியிடமிருந்தும் எதுவும் நடக்காது. ஐசிசி பூனைக்கால்கள் கொண்ட ஒரு அமைப்பாகும்.
  இவ்வாறு சாடினார் ஆண்டி லாய்ட்.
  Published by:Muthukumar
  First published: