முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மன அழுத்தத்தை எவ்வாறு சமாளித்தார் மற்றும் தன்னைச் சுற்றி தன்னை நேசிப்பவர்கள் இருந்தும் தான் தனியனாக உணர்ந்ததாக மன ஆரோக்கியம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
"ஒரு விளையாட்டு வீரரைப் பொறுத்தவரை, விளையாட்டு என்பது ஒரு வீரராக உங்களிடமிருந்து சிறந்ததைக் கொண்டு வர முடியும், ஆனால் அதே நேரத்தில், நீங்கள் தொடர்ந்து இருக்கும் அழுத்தத்தின் அளவு உங்கள் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். இது நிச்சயமாக ஒரு தீவிரமான பிரச்சினை, நாங்கள் எல்லா நேரங்களிலும் வலுவாக இருக்க முயற்சிக்கும் போது, அது நம்மை பிரித்துப் போட்டுவிடும்.
ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கான எனது உதவிக்குறிப்புகள், ஆம், உடல் தகுதி மற்றும் மீட்சியில் கவனம் செலுத்துதல் ஆகியவை ஒரு நல்ல விளையாட்டு வீரராக இருப்பதற்கு முக்கியமாகும், ஆனால் அதே நேரத்தில், உங்கள் அகமனதுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் அது கூறுவதை கேட்பதும் முக்கியம்.
என்னை ஆதரிக்கும், நேசிக்கும் நபர்கள் நிறைந்த ஒரு அறையில் கூட, நான் தனியாக உணர்ந்த நேரங்களை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன், மேலும் இது நிறைய பேருக்கு உள்ள ஒரு உணர்வு என்று நான் நம்புகிறேன். எனவே, உங்களுக்காக நேரத்தை ஒதுக்கி, உங்களின் சுயத்துடன் மீண்டும் இணையுங்கள். அந்த இணைப்பை நீங்கள் இழந்தால், மற்ற விஷயங்கள் உங்களைச் சுற்றி நொறுங்கிவிடும்.
நேரத்தை எப்படி தனித்தனியாக ஒதுக்குவது என்பது சமச்சீர் தன்மையை உருவாக்கிக் கொள்ள உதவும். ஆனால் இதற்கும் பயிற்சி தேவை. ஆனால் இதில் நேரத்தை செலவிடுவது நல்லது. இதுதான் பணியில் இருந்தாலும் நாம் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
ஒரு நெருக்கடியான முழு தொடருக்குப் பிறகு நான் என் குடும்பத்துடன் இருப்பதை விரும்புகிறேன். அதே வேளையில் என் பொழுதுபோக்குகளையும் நான் விடாமல் பின்பற்றுவேன். பிரயாணம் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்து. ஆம் நல்ல காபியும் என் மன அழுத்தத்தை குறைக்கும்.
நான் ஒரு காபிக் கனவான் உலகம் முழுதும் பல்வேறு மணத்தில் இருக்கும் காபியை ருசிப்பதில் எனக்கு அலாதி ஆர்வமுண்டு.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Virat Kohli