முகப்பு /செய்தி /விளையாட்டு / தோனிக்கு முன்னால் தினேஷ் கார்த்திக்கையா இறக்குவது?- பார்த்தீவ் படேல் சாடல்

தோனிக்கு முன்னால் தினேஷ் கார்த்திக்கையா இறக்குவது?- பார்த்தீவ் படேல் சாடல்

தோனி-கார்த்திக்

தோனி-கார்த்திக்

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் பினிஷர் தோனியை முன்னால் இறக்காமல் தினேஷ் கார்த்திக்கை இறக்கியது பெருந்தவறு என்கிறார் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல்.

  • 1-MIN READ
  • Last Updated :

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் பினிஷர் தோனியை முன்னால் இறக்காமல் தினேஷ் கார்த்திக்கை இறக்கியது பெருந்தவறு என்கிறார் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல்.

ஆங்கில இணையதளம் ஒன்றில் உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பார்த்திவ் படேல், 5ம் நிலையில் கார்த்திக்கும், 7ம் நிலையில் தோனியும் இறங்கியதைக் குறிப்பிட்டார். ஆனால் இவருக்குப் புரியாது, தோனி அவர் டவுனை விட்டு வேறு டவுனில் இறங்க மாட்டார், தன் டவுன் ஆர்டரை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார் தோனி.

அந்த டவுன் ஆர்டரில் ஒரு சவுகரியம் இருக்கிறது, சப்போஸ் தோனி அவுட் ஆகிவிட்டால் அவர் இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று ரசிகர்கள் பேசுவார்கள், சப்போஸ் அவர் நின்றும் ஆட்டம் தோற்றால், மற்றவர்கள் யாரும் சரியாக ஆடவில்லை தோனி என்ன செய்வார் என்று ரசிகர்கள் கருதுவார்கள். ஆனால் முன்னால் இறக்கி விட்டு சொதப்பு சொதப்பென்று சொதப்பி ஆட்டத்தையே மந்தமாக்கி விட்டால் தோனி பொறுப்பேற்க வேண்டி வரும், இதை ஒருபோதும் தோனி விரும்புவதில்லை, அதனால்தான் அவர் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகே முன்னால் இறங்குவதை தவிர்த்து வந்தது பலருக்கும் ஏன் என்று தெரியாது.காரணம் இதுதான் 7ம் நிலையில் இறங்குவதால் உள்ள இமேஜ் சவுகரியம் இதுதான்.

இந்நிலையில் பார்த்திவ் படேல் கூறுவதைப் பார்ப்போம்:

2019 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக்கை நம்பர் 5இல் இறக்கினோம். தோனியை 7ம் நிலையில் அனுப்பினோம். தோனியை முன்னால் இறக்காமல் அவர் ஓய்வறையிலிருந்து போட்டியை வென்று கொடுப்பாரா என்ன?

இருதரப்பு தொடராக இருந்தால் பரவாயில்லை மாற்றங்கள் செய்ய வேண்டாம், ஆனால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களின் அரையிறுதி, இறுதி என்பது சும்மா இல்லை. அப்படியிருக்கையில் முடிவுகள் கச்சிதமாக இருக்க வேண்டும்.

2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்து தவறிழைத்தது. 2019-ல் நம்பர் 4ம் இடத்தில் யார் இறங்குவது என்ற பிரச்சனை தீர்க்கப்படாமலே உலகக்கோப்பைக்கு சென்றோம் தோற்றோம்.

கடைசியாக நடந்த டி20 உலகக்கோப்பையில் நாம் யஜுவேந்திர செஹலை உட்கார வைத்திருந்தோம், அவர் நம் நம்பர் 1 ஸ்பின்னர். நாம் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாததற்குக் காரணம் நாம் உத்தி ரீதியாக, முடிவுகளில் ஏகப்பட்ட தவறுகள் இழைக்கின்றோம் என்பதே.

இவ்வாறு கூறுகிறார் பார்த்தீவ் படேல்.

First published:

Tags: Dinesh Karthik, ICC world cup, MS Dhoni