மும்பையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட்டின் டாஸ்
மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இதை சுவாரசியமான ஒரு தகவலைப் பரிமாற பயன்படுத்துவோம், 1988-ல் கடைசியாக இந்தியா-நியூசிலாந்து அணிகள் மும்பையில் மோதிய போது இப்போதைய கேப்டன் விராட் கோலி பிறந்து 3 வாரங்கள்தான் ஆகியிருந்தன. நியூசிலாந்து கேப்டன் கேம் வில்லியம்சன் பிறக்கவேயில்லை.
கடைசியாக மும்பையில் நியூசிலாந்து அணி 1988-ம் ஆண்டு மோதிய போது முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் அந்த அணிக்குக் கேப்டன், இந்திய அணிக்கு திலிப் வெங்சர்க்கார் கேப்டன். இந்தப் போட்டியில் நியூசிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தியாவில் நியூசிலாந்து வென்ற 2 டெஸ்ட்களில் இதுவும் ஒன்று.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 236 ரன்கள் எடுத்தது. ஜான் பிரேஸ்வெல் என்ற ஸ்பின்னர் அரைசதம் எடுத்து அதிக ஸ்கோரை எடுத்தவரானார். இந்தியா தரப்பில் ரவிசாஸ்திரி 4 விக்கெட், ஹிர்வாணி 3 விக்கெட். கபில்தேவ் 2 விக்கெட். இந்தியா பேட்டிங் இறங்கிய போது நம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 94 ரன்கள் விளாசினார். ரவிசாஸ்திரி 32 ரன்கள். சர் ரிச்சர்ட் ஹாட்லி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியா 234 ரன்களுக்குச் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 279 ரன்கள் எடுத்தது.
Also Read: ‘தென் ஆப்பிரிக்காவில் தேவையில்லாமல் ரஹானேவை நீக்கவில்லையா கோலி’
அர்ஷத் அயூப் 5 விக்கெட், ஹிர்வாணி 4 விக்கெட். இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 282 ரன்கள். இந்திய அணி 145 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. ஹாட்லி 4 விக்கெட் ஜான் பிரேஸ்வெல் 6 விக்கெட். ஹாட்லி 10 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்று டிரா ஆனது. ஆட்ட நாயகனாக பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஜான் பிரேஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 3 ஸ்பின்னர்கள் இல்லையாம்- மீண்டும் அஸ்வினுக்கு நெருக்கடி?- கோலி பீடிகை
ஆகவே அன்று அந்தப் போட்டியின் போது விராட் கோலி பிறந்தே 3 வாரங்கள்தான் ஆகியிருந்தது, கேன் வில்லியம்சன் பிறக்கவே இல்லை. இந்த இருவரும் இன்று கேப்டன்சியில் மோதும் வரலாற்றுத் தருணமாக இந்த மும்பை டெஸ்ட் போட்டி அமைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.