முகப்பு /செய்தி /விளையாட்டு / Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!

Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!

இம்ரான் தாஹிர்

இம்ரான் தாஹிர்

ஐபிஎல் தொடரில் மும்பை, சென்னை. டெல்லி, ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை அணியின் இம்ரான் தாஹிர் தனது மகனுக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர், ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் போட்டியின் போது விக்கெட் எடுத்தால் சந்தோஷத்தில் ஓடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப் பெயரும் உண்டு.

இவர் மைதானத்தில் ஓடுவதை வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் பார்த்து ரசிப்பார்கள். இவர் ஓடுவதை வைத்து பல மீம்ஸ்களும் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.

இந்நிலையில் அவர் தனது மகனுக்கு மைதானத்தில் பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பந்தை தூக்கிபோட்டு அதை எடுத்து வீசச் சொல்லி பயிற்சி கொடுக்கிறார் இம்ரான்.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ஜூனியர் தாஹிர் ரெடியாகிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.

Also watch

First published:

Tags: Chennai Super Kings, CSK, IPL, IPL 2019