தொடக்கப் போட்டியிலேயே புதிய உலகசாதனை படைத்த இம்ரான் தாஹிர்!

வழக்கத்திற்கு மாறாக சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரை, முதல் ஓவர் வீச டூபிளெசிஸ் அழைத்தார்.

தொடக்கப் போட்டியிலேயே புதிய உலகசாதனை படைத்த இம்ரான் தாஹிர்!
இம்ரான் தஹீர்
  • News18
  • Last Updated: May 30, 2019, 5:42 PM IST
  • Share this:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் உலகக் கோப்பையில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ரவுண்ட் ராபின் முறையிலான லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.


1992 உலகக் கோப்பைக்குப் பின் முதல் முறையாக ரவுண்ட்-ராபின் சுற்று மூலம் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய், பேர்ஸ்டோவ் களமிறங்கினார். இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரை, முதல் ஓவர் வீச டூபிளெசிஸ் அழைத்தார். இதற்கு, கை மேல் பலனும் கிடைத்தது. இரண்டாவது பந்திலேயே, பேரிஸ்டோவ்வை, டக்-அவுட்டாக்கி வெளியேற்றினார்.

இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இம்ரான் தஹீர் படைத்துள்ளார். மேலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.உலகக்கோப்பை தொடரின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்த இரண்டாவது வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார் ஜானி பேர்ஸ்டோவ். இதற்குமுன் 1992 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் ஜான் ரைட் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.

Also Watch

First published: May 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading