நீ எங்கள தொட்டுருக்க கூடாது, தொட்டவன நாங்க விட்டதே இல்ல - இம்ரான் தாஹிர்

சிறப்பாக பந்து வீசிய இம்ரான் கான் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நீ எங்கள தொட்டுருக்க கூடாது, தொட்டவன நாங்க விட்டதே இல்ல - இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்
  • News18
  • Last Updated: March 24, 2019, 8:06 AM IST
  • Share this:
நீ திரும்பவும் எங்கள தொட்டுருக்க கூடாது. தொட்டுட்ட, தொட்டவன நாங்க விட்டதே இல்ல என்று சென்னை அணியின் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

12-ஐபிஎல் சீசன் தொடர் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி.

சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், ப்ராவோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


71 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 15 ரன்கள் எடுத்த போது ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.தற்போது 2 புள்ளிகளை பெற்று சென்னை அணி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சிறப்பாக பந்து வீசிய இம்ரான் கான் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து இம்ரான் தாகிர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீ திரும்பவும் எங்கள (சென்னை அணி) தொட்டுருக்கக் கூடாது. தொட்டுட்ட, தொட்டவன நாங்க விட்டதே இல்ல. தப்பு பண்ணீட்டயே சிங்காரம். முதல் அடி எப்பவும் இந்த பேட்டயோட அடி தான். எடுடா வண்டிய, போடுடா விசில’ என்று பதிவிட்டுள்ளார்.என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ - கலாய்த்த ஹர்பஜன் சிங்

Also watch

First published: March 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்